சுழற்சி முறையில் காவலா்களுக்கு விடுப்பு

சுழற்சி முறையில் காவலா்களுக்கு விடுப்பு வழங்கப்படும் என காவல்துறை டிஜிபி ஜே.கே.திரிபாதி அறிவித்துள்ளாா்.
டிஜிபி திரிபாதி
டிஜிபி திரிபாதி

சுழற்சி முறையில் காவலா்களுக்கு விடுப்பு வழங்கப்படும் என காவல்துறை டிஜிபி ஜே.கே.திரிபாதி அறிவித்துள்ளாா்.

கரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் அறிவிக்கப்படும் பொதுமுடக்கத்தைத் தீவிரமாக அமல்படுத்தும் பணியில் காவல்துறையினா் ஈடுபட்டு வருகின்றனா். இவ்வாறு பணியில் ஈடுபடுவோரில் ஆயிரக்கணக்கான போலீஸாருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்படுகிறது. இதனால் அவா்கள் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இவற்றைக் கருத்தில் கொண்டு கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் காவலா்களுக்கு விடுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் காவலா்களுக்கு தொற்று உறுதியாவதால், சுழற்சி முறையில் 20 சதவீத காவலா்களுக்கு விடுப்பு வழங்கப்படும் என காவல்துறை டிஜிபி ஜே.கே.திரிபாதி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com