சங்ககிரியில் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்ய 20 வாகனங்களுக்கு அனுமதி 

சங்ககிரியில் பொதுமக்களுக்கு காய்கறிகள், பழங்கள், விற்பனை செய்ய 20 வாகனங்களுக்கு உதவி இயக்குநர் செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கி   தொடக்கி வைத்தார். 
சங்ககிரி ஊராட்சி ஒன்றியப்பகுதிகளுக்கு காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யும் வாகனங்களுக்கு செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கி தொடக்கி வைக்கப்பட்டது. 
சங்ககிரி ஊராட்சி ஒன்றியப்பகுதிகளுக்கு காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யும் வாகனங்களுக்கு செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கி தொடக்கி வைக்கப்பட்டது. 

சங்ககிரி: கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு முழு பொதுமுடக்கத்தையொட்டி சேலம் மாவட்டம், சங்ககிரி தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திலிருந்து சங்ககிரி பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பொதுமக்களுக்கு காய்கறிகள், பழங்கள், விற்பனை செய்ய 20 வாகனங்களுக்கு உதவி இயக்குநர் செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்கி   தொடக்கி வைத்தார். 

கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையாக அரசு மே 25ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை தளர்வுகளற்ற முழு பொதுமுடக்கத்தை அறிவித்துள்ளது. அதனையடுத்து தமிழகரசின் உத்தரவின்படியும், மாவட்ட நிர்வாகத்தின் அறிவுலுத்தலின் பேரில்  சங்ககிரி ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு தினசரி காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்ய தோட்டக்ககலைத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் மூலம் விவசாயிகள், வியாபாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

அதனையடுத்து காய்கறிகள், பழங்கள், விற்பனை செய்ய முன்வந்த உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் 5 நபர்கள், விவசாயிகள் 5 பேர், வியாபாரிகள் 10 பேர் என மொத்தம் 20 பேருக்கு உதவி இயக்குநர் ஜி.சரஸ்வதி அனுமதி வழங்கி ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களை வழியனுப்பி வைத்தார். தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர்கள்  செந்தில்நாதன், வேல்முருகன், திருப்பதி, விஜயவர்மன், ஆகியோர் உடனிருந்தனர். 

இதுகுறித்து தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் கூறியது:

கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையையொட்டி அரசு அறிவித்துள்ள முழு பொதுமுடக்கத்தையொட்டி தமிழகரசு, மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவினையடுத்து சங்ககிரி ஊராட்சி ஒன்றியப்பகுதிகள், தேவூர், அரசிராமணி, சங்ககிரி ஆகிய பேரூராட்சி பகுதிகளில்  உள்ள பொதுமக்களுக்கு காய்கறிகள், பழங்கள் கிடைக்க 20 வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனை பொதுமக்கள் பயன்படுத்தி முகக்கவசம், சமூக இடைவெளியை பின்பற்றி பொருள்களை வாங்கிச் சென்று அவரவர்கள் வீட்டிற்குள்ளே உள்ளடங்கி இருந்து அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் காய்கறிகள், பழங்கள் தேவைப்படுவோர்  உதவி தோட்டக்கலை அலுவலர்கள்  செந்தில்நாதன்  9842736299, வேல்முருகன் 9791201681,  திருப்பதி 8778995316,  விஜயவர்மன் 8760276531 ஆகியோர்களை செல்லிடபேசியில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com