திருச்சியில் கருப்பு கொடிகளுடன் விவசாயிகள் மறியல்: வீடுகளில் கருப்புக் கொடியேற்றி எதிர்ப்பு

நாடு முழுவதும் விவசாயிகள் சார்பில் புதன்கிழமை கருப்பு தினம் அனுஷ்டிக்கப்படுவதைத் தொடர்ந்து திருச்சியிலும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் வீடுகளில் கருப்பு கொடியேற்றினர்.
திருச்சி-கரூர் புறவழிச் சாலையில் அரை நிர்வாணத்துடன் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்
திருச்சி-கரூர் புறவழிச் சாலையில் அரை நிர்வாணத்துடன் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்

திருச்சி: நாடு முழுவதும் விவசாயிகள் சார்பில் புதன்கிழமை கருப்பு தினம் அனுஷ்டிக்கப்படுவதைத் தொடர்ந்து திருச்சியிலும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் வீடுகளில் கருப்பு கொடியேற்றினர்.

திருச்சி-கரூர் புறவழிச் சாலையில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பி. அய்யாக்கண்ணு தலைமையில், அரை நிர்வாணத்துடன் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி புதுதில்லியில் கடந்த 6 மாதங்களாக போராடும் விவசாயிகளை ஆதரித்தும்,  பாஜக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நாளை கருப்பு தினமாக கடைப்பிடிக்கும் வகையிலும் இந்த போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தில் சங்கத்தின் திருச்சி மாவட்ட தலைவர் மேகராஜன், மாவட்ட செயலாளர் சிவகுமார், மாநில இணை ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் சிதம்பரம், மற்றும் நிர்வாகிகள் செல்வம், சதாசிவம், குணசேகரன், லோகேஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்டதாக 50-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர்.

இதேபோல, ஏஐடியுசி அதனைச் சார்ந்த சங்கங்கள் அலுவலகங்களிலும் வேலை நிமித்தம் தொழிலாளர்கள் கூடுகிற நிறுவனங்கள் முன்பும் தொழிலாளர் வசிக்கும் வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்றி பதாகைகளை பிடித்தம் கருப்பு பேட்ஜ் அணிந்து கருப்பு நாளை கடைப்பிடித்தனர். பெல் நிறுவன தொழிற்சங்கத்தின் சார்பிலும், அதன் தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்களது வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com