சேலம் மாவட்ட கரோனா சிகிச்சை பணிகளுக்கு அரசு ஆசிரியர்கள் ரூ.1.50 கோடி அன்பளிப்பு

கரோனா சிகிச்சை மையங்களில் செய்யப்பட்டு வரும் செலவினங்களுக்கு, சேலம் மாவட்ட அரசு ஆசிரியர்கள் ரூ.150 கோடி அன்பளிப்பாக வழங்க உள்ளனர். 
சேலம் மாவட்ட கரோனா சிகிச்சை பணிகளுக்கு அரசு ஆசிரியர்கள் ரூ.1.50 கோடி அன்பளிப்பு


தம்மம்பட்டி: சேலம் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், மாவட்டத்தில் பல இடங்களில் நடைபெறும் கரோனா சிகிச்சை மையங்களில் செய்யப்பட்டு வரும் செலவினங்களுக்கு, சேலம் மாவட்ட அரசு ஆசிரியர்கள் ரூ.150 கோடி அன்பளிப்பாக வழங்க உள்ளனர். 

சேலம் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களல்லாத பணியாளர்கள் என சுமார் 13 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர்.  இவர்கள் அனைவரும் மாவட்டம் முழுவதும் அந்தந்த பகுதிகளில் அரசு சார்பில்  கரோனா தடுப்பு மையங்கள் வேகமாக தொடங்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக மாவட்ட நிர்வாகத்திற்கு கூடுதல் செலவீனம் ஏற்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றை குறைக்கவும், தொற்றாளர்களை வேகமாக குணப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும்  மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் பணி முடிக்கிவிடப்பட்டுள்ளது.    

இந்நிலையில்,  இத்தகைய கூடுதல் செலவினங்களால் மாவட்ட நிர்வாகம் தடுமாறி வரும் நிலையில், சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு ஆசிரியர்களும் தலா ஆயிரம் ரூபாய் வீதமும், அதற்கு மேலும் அன்பளிப்பாக ஓரிரு நாளில் வழங்க உள்ளனர். இதன் மூலம் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியாளர் ஆகியோர் சேர்ந்து ரூ.1.50 கோடியை, மனமுவந்து அன்பளிப்பாக வழங்க உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com