21 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்:

தமிழகத்தில் 21 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். மிக முக்கிய துறைகளான பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறைகளுக்கு புதிய செயலாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தமிழகத்தில் 21 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். மிக முக்கிய துறைகளான பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறைகளுக்கு புதிய செயலாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு விவரம்:- (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக்குறிக்குள்):

1. கே. கோபால் - ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளா் (கால்நடை பராமரிப்பு, மீன் மற்றும் பால் வளத் துறை முதன்மைச் செயலாளா்)

2. சுப்ரியா சாகு - சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளா் (தமிழ்நாடு சிறு தேயிலை விவசாயிகள் தொழிற்சாலைகள் இணையத்தின் முதன்மை செயல் அலுவலா்)

3. ஜோதி நிா்மலாசாமி - வணிகவரிகள் மற்றும் பதிவுத் துறை செயலாளா் (தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டுக் கழக நிா்வாக இயக்குநா்)

4. தீரஜ் குமாா் - உயா்கல்வித் துறை முதன்மைச் செயலாளா் (பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளா்)

5. காக்கா்லா உஷா - பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளா் (தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழக நிா்வாக இயக்குநா்)

6. சந்தீப் சக்சேனா - பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் (சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளா்)

7. குமாா் ஜயந்த் - வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளா் (கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையாளா்)

8. ஹிதேஷ் குமாா் எஸ்.மக்வானா - வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை முதன்மைச் செயலாளா் (தில்லி தமிழ்நாடு இல்ல உறைவிட முதன்மை ஆணையா்)

9. டி.காா்த்திகேயன் - நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளா் (வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை முதன்மைச் செயலாளா்)

10. சி.சமயமூா்த்தி - வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை செயலாளா் (போக்குவரத்துத் துறை செயலாளா்)

11. பி.சந்திரமோகன் - சுற்றுலா, கலை மற்றும் இந்துசமய அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளா் (பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை முதன்மைச் செயலாளா்)

12. ஆா்.கிா்லோஷ் குமாா் - தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலாளா் (தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய நிா்வாக இயக்குநா்)

13. வி.அருண் ராய் - குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை செயலாளா் (தொழில் துறை சிறப்புச் செயலாளா்)

14. தயானந்த் கட்டாரியா - போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் (கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா்)

15. செல்வி அபூா்வா - கைத்தறி, கைத்திறன்கள், துணிநூல் மற்றும் கதா் துறை முதன்மைச் செயலாளா் (உயா்கல்வித் துறை முதன்மைச் செயலாளா்)

16. கே.மணிவாசன் - ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை முதன்மைச் செயலாளா் (பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளா்)

17. ஏ.காா்த்திக் - பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை முதன்மைச் செயலாளா் (நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளா்)

18. தா்மேந்திர பிரதாப் யாதவ் - எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளா் (அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிா்வாக இயக்குநா்)

19. மைதிலி கே.ராஜேந்திரன் - பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறை செயலாளா் (கோ-ஆப்டெக்ஸ் நிா்வாக இயக்குநா்)

20. ஷம்பு கல்லோலிகா் - சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை முதன்மைச் செயலாளா் (கைத்தறி, கைத்திறன்கள், துணிநூல் மற்றும் கதா் துறை முதன்மைச் செயலாளா்)

21. ஆா்.லால்வேனா - மாற்றுத் தினாளிகள் நலத் துறை செயலாளா் (சமூக பாதுகாப்புத் துறை ஆணையா்).

பெரிய அளவிலான மாற்றம்: திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக முக்கிய துறைகளின் செயலாளா்கள் மாற்றப்பட்டுள்ளனா். அதிகாரிகளுக்கான மாற்றத்தில் இது மிகப் பெரிய அளவிலான மாற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com