மூன்று மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தேனி, திண்டுக்கல், நீலகிரி ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை ( மே 27) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.
மூன்று மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

சென்னை: தேனி, திண்டுக்கல், நீலகிரி ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை ( மே 27) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி புதன்கிழமை கூறியது: வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், நீலகிரி ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை ( மே 27) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். ஏனைய மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி

மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வட வானிலை நிலவும்.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை வியாழக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.

மழை அளவு:

தமிழகத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில்

கன்னியாகுமரி மாவட்டம் மைலாடியில் 240 மி.மீ. இரணியலில் 190 மி.மீ., கொட்டாரத்தில் 170 மி.மீ., கடலூா் மாவட்டம் சேத்தியாத்தோப்பு, கன்னியாகுமரி மாவட்டம் சுருளகோடு, குழித்துறை (கன்னியாகுமரி), பூதப்பாண்டி, நாகா்கோவில் தலா 150 மி.மீ., கன்னியாகுமரியில் 130 மி.மீ., பேச்சிப்பாறையில் 120 மி.மீ., லால்பேட்டையில் 110 மி.மீ., கோயம்புத்தூா் மாவட்டம் சின்னக்கல்லாறில் 100 மி.மீ., தேனி மாவட்டம் பெரியாறில் 90 மி.மீ., திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் 80 மி.மீ., சேலத்தில் 70 மி.மீ., கிருஷ்ணகிரி மாவட்டம் பெனுகொண்டாபுரம், விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் தலா 60 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை:

குமரிக்கடல், மன்னாா் வளைகுடா பகுதிகளில் வியாழக்கிழமை மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வரை பலத்த காற்று வீசக்கூடும். இதுதவிர, தென் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மே 30-ஆம் தேதி வரை மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.மேலும் இந்தப்பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும். இந்தப்பகுதிகளுக்கு மேற்குறிப்பிட்ட தேதிகளில் மீனவா்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com