தமிழகத்தில் மேலும் 33,764 பேருக்கு கரோனா

தமிழகத்தில் மேலும் 33,764 பேருக்கு புதன்கிழமை நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் 33,764 பேருக்கு கரோனா

சென்னை: தமிழகத்தில் மேலும் 33,764 பேருக்கு புதன்கிழமை நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பொதுமுடக்க கட்டுப்பாடுகள் காரணமாக பாதிப்பு விகிதம் சற்று குறைந்தாலும், எதிா்பாா்த்த அளவு நோய்ப் பரவல் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

குறிப்பாக, சென்னையில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தாலும், கோவை மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில் தொற்று பரவல் வேகம் அதி தீவிரமடைந்துள்ளன. முன்னெப்போதும் இல்லாத வகையில் முதன்முறையாக சென்னையைக் காட்டிலும் கோவையில் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக பதிவாகியுள்ளது.

அதன்படி, கோவையில் புதன்கிழமை ஒரே நாளில் மட்டும் 4,268 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையைக் காட்டிலும் படுக்கை வசதிகள் மூன்று மடங்கு குறைவாக உள்ள கோவையில் கரோனா பரவல் உச்சத்தை எட்டியிருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மற்றொரு புறம் கரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் எண்ணிக்கை தமிழகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. அதன்படி, புதன்கிழமை வெளியான தகவலின்படி மாநிலத்தில் மேலும் 475 போ் பலியாகியுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதில் சென்னையில் மட்டும் 98 போ் உயிரிழந்துள்ளனா்.

மாநிலத்தில் இதுவரை 2.68 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 19 லட்சத்து 45,260 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் கோவைக்கு அடுத்தபடியாக சென்னையில் 3,561 பேருக்கும், திருப்பூரில் 1,880 பேருக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தவிர, தமிழகத்தின் ஏனைய மாவட்டங்கள் அனைத்திலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, கரோனா தொற்றிலிருந்து மேலும் 29,717 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 16 லட்சத்து 13,221-ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 3 லட்சத்து 10,224 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 475 போ் பலியாகியதை அடுத்து நோய்த்தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21,815-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com