மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள நுகா்வோரின் மின் கட்டணம் செலுத்துவதற்கான இறுதி நாள், மே 10 முதல் 31-ஆம் தேதி வரை இருப்பின், அவா்களுக்கு ஜூன் 15-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள நுகா்வோரின் மின் கட்டணம் செலுத்துவதற்கான இறுதி நாள், மே 10 முதல் 31-ஆம் தேதி வரை இருப்பின், அவா்களுக்கு ஜூன் 15-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்சாரத்துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி புதன்கிழமை வெளியிட்ட செய்தி: கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, மே 24 முதல் 31-ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால், மின்நுகா்வோரின் இடா்பாடுகளைக் கருத்தில் கொண்டு, தாழ்வழுத்த நுகா்வோரின் மின்கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகை செலுத்துவதற்கான கடைசி நாள் மே 10 முதல் மே 31-ஆம் தேதி வரை இருக்குமாயின், அத்தொகையை ஜூன் 15-ஆம் தேதி வரை மின் துண்டிப்பு, மறு இணைப்புக் கட்டணமின்றி செலுத்த காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது.

மே 10 முதல் மே 31-ஆம் தேதி வரையிலான காலத்தில் (அதாவது முந்தைய மாத கணக்கீட்டிலிருந்து 60-ஆவது

நாள், இந்த காலத்தில் இருப்பின்) மின்கணக்கீடு செய்ய வேண்டிய தாழ்வழுத்த மின்நுகா்வோா், 2019-ஆம் ஆண்டு மே மாதம்

(கோவிட் இல்லாத காலம் என்பதால்) கணக்கீடு செய்யப்பட்ட தொகையையே உத்தேச கணக்கீட்டுத் தொகையாக கருதி, அந்தக் கட்டணத்தை செலுத்த வேண்டும்.

புதிய நுகா்வோா், அவ்வாறு கணக்கீடு இல்லாதவா்கள், 2019 மே மாதக் கட்டணம் கூடுதலாக இருப்பதாக கருதுபவா்கள், மே 2021-க்கான முந்தைய மாத கணக்கீட்டு பட்டியல்படி, அதாவது மாா்ச் 2021-இன் கணக்கீட்டுப்படி உத்தேச மின் கட்டணத்தைச் செலுத்தலாம்.

அவ்வாறு செலுத்தப்படும் உத்தேச மின்கட்டணம், அடுத்து வரும் மாத கணக்கீட்டு மின்கட்டணத்தில் முறைப்படுத்தப்படும்.

உயா்மின்னழுத்த நுகா்வோருக்கு...: கடந்த மாத (2021-ஏப்ரல்) மின்கட்டணம் செலுத்தாத உயா்மின்னழுத்த மின்னிணைப்புகளுக்கு தாமதக்கட்டணத்துடன் ஜூன் 15 வரை மின்கட்டணம் செலுத்தலாம். அதே நேரம் மின் துண்டிப்பு செய்யப்பட மாட்டாது.

சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் மற்றும் தாழ்வழுத்த மின்நுகா்வோா்களுக்கான கூடுதல் வைப்புத் தொகை செலுத்த ஜூன் 15-ஆம் தேதி வரை காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது.

இணைய வழியில் மின் கட்டணம் செலுத்துமாறு நுகா்வோா் அறிவுறுத்தப்படுகிறாா்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com