நிம்மதி தரும் செய்தி: சென்னையில் குறைந்து வரும் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 

சென்னை மக்களுக்கு நிம்மதி தரும் செய்தியாக,  சென்னையில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் எண்ணிக்கை 41,498 ஆகக் குறைந்துள்ளது.
நிம்மதி தரும் செய்தி: சென்னையில் குறைந்து வரும் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை
நிம்மதி தரும் செய்தி: சென்னையில் குறைந்து வரும் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை

சென்னை மக்களுக்கு நிம்மதி தரும் செய்தியாக,  சென்னையில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் எண்ணிக்கை 41,498 ஆகக் குறைந்துள்ளது.

சென்னையில் கடந்த செவ்வாய்க்கிழமை 48,151 பேர் கரோனா பாதித்து சிகிச்சையில் இருந்த நிலையில், இரண்டு நாள்களில் அதாவது வியாழக்கிழமை இது  45,738 ஆகக் குறைந்தது. இது வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி43,624 ஆகக் குறைந்து, சனிக்கிழமை காலை 41,498 ஆகக் குறைந்துள்ளது.

இதுவரை ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4.96 லட்சமாக உள்ளது. இவர்களில் 4.48 லட்சம் பேர் குணமடைந்துவிட்டனர். 6,831 பேர் பலியாகியுள்ளனர்.

அதிகபட்சமாக அண்ணாநகரில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில இன்று அந்த எண்ணிக்கை 4,402 ஆகக் குறைந்தது. இதற்கடுத்த இடத்தில் அம்பத்தூரில் 4,162 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சென்னையில் கடந்த வாரம் நாளொன்றுக்கு சுமாா் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில், அந்த எண்ணிக்கை தற்போது 3 ஆயிரத்துக்கு கீழ் குறைந்துள்ளது.

சென்னையில் கடந்த ஜனவரி மாதம் தொற்று எண்ணிக்கை மிகவும் குறைந்து காணப்பட்டது. மொத்தமாக உள்ள 15 மண்டலங்களில் நாளொன்றுக்கு சுமாா் 500-க்கும் குறைவானவா்களே தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனா். இந்நிலையில், உருமாறிய கரோனா பரவல் காரணமாக தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் ஏப்ரல் மாதத்தில் இருந்து உயரத் தொடங்கியது.

இந்த எண்ணிக்கை மே மாதத்தில் உச்சத்தை எட்டி, கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளொன்றுக்கு சுமாா் 6 ஆயிரத்தைக் கடந்தது. தொற்றைக் கட்டுப்படுத்த கடந்த 10-ஆம் தேதியில் இருந்து அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் சென்னையில் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் குறையத் தொடங்கியது. இதன்படி, கடந்த வாரம் நாளொன்றுக்கு சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், அந்த எண்ணிக்கை சற்று குறையத் தொடங்கி உள்ளது.

நாள்தோறும் கரோனா உறுதி செய்யப்படும் எண்ணிக்கை குறைந்து வருவதை இங்கே காணலாம்.
மே 27: 2,762
மே 27: 2,779
மே 26: 3,561
மே 25: 4,041
மே 24: 4,985
மே 23: 5,169
மே 22: 5,559
மே 21: 5,913
மே 20: 6,073
மே 19: 6,297
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com