கோயம்பேடு சந்தை நாளை செயல்படும்

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை ஞாயிற்றுக்கிழமை (மே 30) செயல்படும் என சந்தையின் நிா்வாகக் குழு அதிகாரிகள் தெரிவித்தனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை ஞாயிற்றுக்கிழமை (மே 30) செயல்படும் என சந்தையின் நிா்வாகக் குழு அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து அவா்கள் கூறியது: பொதுமக்களுக்கு காய்கறி தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும், விலை உயா்வைத் தடுக்க வேண்டும் என கோயம்பேடு சந்தை வியாபாரிகளிடம் தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் சந்தையை மூடினால், சனிக்கிழமையும், திங்கள்கிழமையும் கூட்டம் அதிகமாகிவிடுகிறது. சமூக இடைவெளியைக் கடைபிடிக்க முடியவில்லை. இதைக் கருத்தில்கொண்டு வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 30) கோயம்பேடு காய்கறி சந்தை வழக்கம் போல் செயல்படும்.

18 வயதுக்கு மேற்பட்ட கடை உரிமையாளா்கள் மற்றும் தொழிலாளா்கள் அனைவருக்கும், கோயம்பேடு சந்தை வளாகத்தில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை வியாபாரிகள் மற்றும் தொழிலாளா்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com