கூத்தாநல்லூரில் கரோனா தடுப்பு மையம் திறப்பு

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கரோனா தொற்று தடுப்பு மையம் திறக்கப்பட்டது.
கூத்தாநல்லூரில் கரோனா தடுப்பு மையம் திறப்பு

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கரோனா தொற்று தடுப்பு மையம் திறக்கப்பட்டது.

திருவாரூர் வடக்கு மாவட்டம் சார்பில், கூத்தாநல்லூர் ஏ.ஆர். சாலையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாயில் வளாகத்தில் கரோனோ தடுப்பு மையம் திறக்கப்பட்டது. கரோனா தொற்று ஊரடங்கால், சமூக இடைவெளியுடன் நடத்தப்பட்ட முகாமிற்கு, மாவட்டத் தலைவர் முஹம்மது பாசித் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் பீர் முஹம்மது, மாவட்டச் செயலாளர் அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூத்தாநல்லூர் நகரத் தலைவர் அபு பஸ்வான் வரவேற்றார்.

முகாமை தொடங்கி வைத்த மாவட்டத் தலைவர் முஹம்மது பாசித் கூறியது: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தமிழகம் முழுவதும் பேரிடர் மனிதநேய சேவைகளை சிறந்த முறையில் செய்து கொண்டு வருகிறோம். கரோனாவால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது, ஆம்புலன்ஸ் சேவைகள், இரத்த தான சேவைகள், ஏழைகளுக்கு உணவு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நல்ல சமுதாயப் பணிகளை செய்து வருகிறோம்.

ஒன்றரை ஆண்டுகளாக உலகத்தையே புரட்டிப் போட்டு உலக மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா தொற்றில் பாதிக்கபட்டு, லட்சக்கணக்கானவர்கள் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள். கரோனா தொற்று திருவாரூர் மாவட்டத்திலும் அதிக அளவில் பரவி வருகிறது.

சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தொண்டு நிறுவனங்கள் பங்கு பெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கலந்து கொண்டது. தமிழக அரசின் கோரிக்கையின்படி, தொண்டு நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தனது அனைத்து பள்ளி வாயில்களிலும் கரோனா தொற்று தடுப்பு மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

மேலும், மனித நேய சேவைகளை இன்னும் துரிதமாக மேற்கொள்வது என்ற அடிப்படையிலும், திருவாரூர் வடக்கு மாவட்டம் சார்பில், கூத்தாநல்லூரில், கரோனா தடுப்பு மையம் திறக்கப்பட்டுள்ளன. இந்த இடுப்பு முகாமில், ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஆம்புலன்ஸ் தேவைகள், ரத்த தான தேவைகள், ரத்த பரிசோதனைகள், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு பரிசோதனைகள் மற்றும் கரோனா தொற்று தொடர்பான விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.

கரோனாற்றால் இறந்தவர்களில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில், திருவாரூர் மாவட்டத்தில், 8 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன என்றார். நிகழ்ச்சியில், மாவட்ட துணைச் செயலாளர் அப்துல் மாலிக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com