சங்ககிரியில் விவசாய நிலங்களை உழும் பணியில் விவசாயிகள்

சங்ககிரி பகுதியில் மானவாரி நிலங்களில் கோடை கால உழவு செய்வதற்காக விவசாய நிலங்களை டிராக்டர் கொண்டு உழும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டனர். 
சங்ககிரி அருகே உள்ள வைகுந்தம் கிராமத்தில் கோடை உழவு செய்வதற்காக அதற்கான பணிகளில் ஞாயிற்றுக்கிழமை  ஈடுபட்ட விவசாயி. 
சங்ககிரி அருகே உள்ள வைகுந்தம் கிராமத்தில் கோடை உழவு செய்வதற்காக அதற்கான பணிகளில் ஞாயிற்றுக்கிழமை  ஈடுபட்ட விவசாயி. 

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்தில் நிகழாண்டு ஏப்ரல், மே மாதங்களில் மிதமான மழை பெய்ததையடுத்து சங்ககிரி வட்டப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் மானவாரி நிலங்களில் கோடை கால உழவு செய்தவற்காக விவசாய நிலங்களை டிராக்டர் கொண்டு உழும் பணிகளில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர். 

சங்ககிரி வட்டத்திற்குள்பட்ட பகுதிகளில் நிகழாண்டு ஜனவரி மாதம் 27.80 மில்லி மீட்டர் மழையும், பிப்ரவரி மாதம் 39 மில்லி மீட்டர் மழையும், ஏப்ரல் மாதத்தில் அதிகளவாக 19ம் தேதி 25 மில்லி மீட்டரும் இம்மாதத்தில் மொத்தம் 86.60 மில்லி மீட்டரும், மே மாதத்தில் 4ம் தேதி 21.2 மில்லிமீட்டரும், 22ம் தேதி 47 மில்லி மீட்டரும், மே 25ம் தேதி 50.3 மில்லி மீட்டரும் இம்மாதத்தில் மொத்தம் 137.70 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது. மார்ச் மாதம் மழை ஏதுவும் பெய்யவில்லை.

அதனையடுத்து சங்ககிரி வட்டத்திற்குள்பட்ட கிராமப்பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மானாவாரி நிலங்களில் கோடை உழவு செய்யும் பொருட்டு அதற்கான ஆயத்த பணிகளில் முதற்கட்டமாக விவசாய நிலங்களை டிராக்டர் கொண்டு உழுது எருக்களை தூவி மண்ணை விளைநிலங்களுக்கு ஏற்றவாறு உருவாக்கும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com