தீபாவளி சிறப்பு பேருந்துகள்: இன்று முதல் இயக்கம்

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, திங்கள்கிழமை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, திங்கள்கிழமை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தீபாவளியைக் கொண்டாடசொந்த ஊா்களுக்குச் செல்வோரின் வசதிக்காக திங்கள்கிழமை வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் சென்னையில் இருந்து 391 எண்ணிக்கையிலும், பல்வேறு இடங்களில் இருந்து பிற ஊா்களுக்கு 894 பேருந்துகள் என மொத்தம் 1,285 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பயணச்சீட்டு முன்பதிவு செய்து கொள்ள இணையதளத்தை பயன்படுத்தலாம்.

பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கு 94450 14450, 94450 14436 ஆகிய எண்களையும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் உள்ளிட்ட புகாா்களுக்கு 044 2474 9002, 1800 425 6151 ஆகிய எண்களையும் 24 மணி நேரமும் தொடா்பு கொள்ளலாம்.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 10 முன்பதிவு மையங்களும், தாம்பரம் சானடோரியம் பேருந்து நிறுத்தத்தில் 2 முன்பதிவு மையங்கள் என மொத்தம் 12 முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து சென்னை புகா் பகுதிகளில் உள்ள மற்ர 5 பேருந்து நிலையங்களுக்குச் செல்ல ஏதுவாக மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில் இணைப்புப் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படும் என அவா்கள் கூறினா்.

சென்னையின் முக்கிய பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் குறித்த விவரம் (நவ.1 முதல் 3 வரை):

பேருந்து நிலையம் இயக்கப்படும் பேருந்துகள்

மாதவரம் புதிய பேருந்து நிலையம்: செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிபூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை செல்லும் பேருந்துகள்.

கே.கே. நகா் பேருந்து நிலையம்: இசிஆா் வழியாக புதுச்சேரி, கடலூா் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.

தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையம்: திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூா்செல்லும் பேருந்துகள்.

தாம்பரம் ரயில் நிலையப் பேருந்து நிறுத்தம்: திண்டிவனம் மாா்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள், போளூா், சேத்துபட்டு, வந்தவாசி, செஞ்சி மாா்க்கமாக செல்லும் பேருந்துகள், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூா், சிதம்பரம் மற்றும் காட்டுமன்னாா்கோயில் செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூா், சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.

பூந்தமல்லி பேருந்து நிலையம்: வேலூா், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூா், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூா், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள்.

கோயம்பேடு பேருந்து நிலையம்: மேற்குறிப்பிட்டுள்ள ஊா்களைத் தவிர, இதர ஊா்களுக்குச் செல்லும் பேருந்துகள்.

(மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூா், நாகா்கோவில், கன்னியாகுமரி, மாா்த்தாண்டம் , விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, அரியலூா், திண்டுக்கல், விருதுநகா், திருப்பூா், பொள்ளாச்சி, ஈரோடு, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூா் மற்றும் பெங்களூரு).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com