
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் - காந்திமதியம்மன் திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திருக்கல்யாணம்.
திருநெல்வேலி: திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் - காந்திமதியம்மன் திருக்கோயிலில் சுவாமி - அம்பாளுக்கு திருக்கல்யாண வைபவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் - காந்திமதியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டுக்கான விழா கடந்த 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையும் படிக்கலாமே.. கான்டாக்ட் லென்ஸ் அணிந்து பட்டாசு வெடிப்பது ஆபத்து
தொடர்ந்து தினமும் காலை, மாலைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கரோனா பொதுமுடக்க கட்டுப்பாடுகள் காரணமாக சுவாமி - அம்பாள் உள்வீதியுலா நடைபெற்றது. கடந்த 1 ஆம் தேதி தபசுக்காட்சி நடைபெற்றது.
_.jpeg)
செவ்வாய்க்கிழமை காலையில் சுவாமி-அம்பாள் திருக்கல்யாணமும், மகாதீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு விருந்து வைபவம் நடைபெற்றது. புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் (நவ.3, 4) ஊஞ்சல் உற்சவமும், 5 ஆம் தேதி மறுவீடு பிரவேசமும் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ராமராஜா மற்றும் ஊழியர்கள் செய்துள்ளனர்.