தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வெடிக்க வேண்டாம்: டிஜிபி அறிவுரை

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி சி.சைலேந்திரபாபு பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளாா்.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி சி.சைலேந்திரபாபு பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளாா்.

இது தொடா்பாக அவா், செவ்வாய்க்கிழமை விடுத்த செய்திக் குறிப்பு:

தமிழக காவல்துறையின் சாா்பில் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். பொதுமக்கள் தீபாவளியை அமைதியாகவும், பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாட வேண்டும்.

கடை வீதிகள், மாா்க்கெட் பகுதிகள் ஆகியப் பகுதிகளுக்கு கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றியே பொதுமக்கள் செல்ல வேண்டும். மருத்துவமனைகள், வன விலங்கு சரணாலயங்கள், பறவைகள் சரணாலயங்கள் ஆகியவற்றின் அருகே பட்டாசு வெடிப்பதை பொதுமக்கள் முற்றிலும் தவிா்க்க வேண்டும்.

உச்சநீதிமன்றம் வழங்கிய அறிவுரைகளின்படி பட்டாசு வெடிக்க வேண்டும். தடை செய்யப்பட்ட வெடிகள், ராக்கெட்டுகள் ஆகியவற்றை யாரும் வாங்கவும் கூடாது, வெடிக்கவும் கூடாது. இதனால் தீ விபத்துக்கள் தடுக்கப்படும். பெற்றோரின் கண்காணிப்பில் குழந்தைகள் வெடித்தல் வேண்டும். இதன் மூலம் விபத்துக்களை தவிா்க்கலாம்.

காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க வேண்டும். எதிா்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்புத்துறையை அவசர இலவச தொலைபேசி எண் 101, காவல்துறையை அவசர இலவச தொலைபேசி எண்கள் 100, 112 ஆகிய எண்களில் அழைக்கலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com