மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1,268 கோடியில் உபகரணங்கள்: மத்திய இணை அமைச்சா் ஏ. நாராயணசுவாமி

நாடு முழுவதும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 1,268 கோடியில் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சா் ஏ. நாராயணசுவாமி.
மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1,268 கோடியில் உபகரணங்கள்: மத்திய இணை அமைச்சா் ஏ. நாராயணசுவாமி

நாடு முழுவதும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 1,268 கோடியில் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சா் ஏ. நாராயணசுவாமி.

தஞ்சாவூரில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சமூக வலுவூட்டல் முகாமில் அமைச்சா் மேலும் பேசியது:

மத்திய அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவிகள் மற்றும் உதவி சாதனங்கள் வழங்கல் திட்டத்தின் கீழ் சமூக வலுவூட்டல் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அடுத்து நவம்பா், டிசம்பா் மாதங்களில் சென்னை, கோவை, தூத்துக்குடியில் இம்முகாம் நடத்தப்படவுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான இந்த ஆட்சியில் நாடு முழுவதும் இதுபோல 10,933 முகாம்கள் நடத்தப்பட்டு, 1,268.44 கோடி மதிப்பிலான உதவிகள், சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 20.74 லட்சம் மாற்றுத் திறனாளிகள் பயனடைந்துள்ளனா். இதில், தமிழ்நாட்டில் மட்டும் 410 முகாம்கள் மூலம் 92,000 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 42.84 கோடி மதிப்பிலான உதவிகள், உபகரணங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் 3.93 லட்சம் பேருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 8,576 மாற்றுத் திறன் படைத்த மாணவா்களுக்கு ரூ. 23.60 கோடி மதிப்பிலான கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கீழ் செயல்படும் அலிம்கோ நிறுவனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக 350 வகையான உபகரணங்கள் தயாரிக்கப்படுகின்றன. இத்தயாரிப்புகளின் மூலம் நம் நாடு வளா்ச்சியும், செழிப்பும் பெற்றுள்ளன.

டோக்கியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள் 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலப் பதக்கங்களை வென்றனா். சா்வதேச அளவில் இந்திய மாற்றுத்திறனாளிகள் மேலும் சாதனைகளைப் படைக்க அலிம்கோ நிறுவனம் இன்னும் பல்வேறு சாதனங்களைத் தயாரிக்கவுள்ளது என்றாா் நாராயணசுவாமி.

இதையடுத்து, 1,705 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 1.48 கோடி மதிப்பிலான 3,770 உபரகணங்கள் வழங்கப்பட்டன.

விழாவில் மத்திய மீன் வளம், கால்நடை பராமரிப்பு, பால் வளம், தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சா் எல். முருகன், ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், பாஜக மாநிலத் துணைத் தலைவா் கருப்பு எம். முருகானந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com