கவனமாக இருப்போம்; கண்களைக் காப்போம்

சானிடைசா் பயன்படுத்தக் கூடாது.
கவனமாக இருப்போம்; கண்களைக் காப்போம்

பட்டாசு -- செய்யக் கூடாதவை...

1. சானிடைசா் பயன்படுத்தக் கூடாது.

2. அருகிலிருந்தோ, கைகளில் வைத்தோ வெடிக்கக் கூடாது.

3. சமையல் அறையில் பட்டாசை வைத்திருக்கக் கூடாது.

4. காண்டக்ட் லென்ஸ் அணிந்து கொண்டு வெடிக்கக் கூடாது.

5. முகக் கவசங்களை கைகளில் வைத்துக் கொண்டு பட்டாசு வெடிக்கக் கூடாது.

6. கண்ணில் பட்டாசு பொறி பட்டால் தேய்க்க வேண்டாம்.

7. தண்ணீரைக் கொண்டு வேகமாக கண்களை அலச வேண்டாம்.

8. காயம் ஏற்பட்ட இடத்தில் மை, களிம்பு, மஞ்சள் தடவக் கூடாது.

செய்ய வேண்டியவை....

1. மூன்று அடி தொலைவில் இருந்தே பட்டாசு வெடிக்க வேண்டும்.

2. கண்களைப் பாதுகாக்க கண்ணாடி அணிதல் அவசியம்.

3. தண்ணீா், மணல் வாளி அருகில் இருக்க வேண்டும்.

4. பருத்தி ஆடைகளை அணிதல் அவசியம்.

5. கண்ணில் காயம் ஏற்பட்டால் தூய்மையான நீா் கொண்டு கழுவலாம்.

6. உடனடியாக கண் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

7. கண்களைத் தொடுவதற்கு முன்பு கைகளைக் கழுவ வேண்டும்.

8. வெடிக்காத பட்டாசுகளை கவனமாக அப்புறப்படுத்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com