8வது மெகா தடுப்பூசி முகாம் ஒத்திவைப்பு: மா. சுப்பிரமணியன்

எட்டாவது தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்பட்டு வரும் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் காஞ்சிபுரத்தில் தெரிவித்துள்ளார்.
8வது மெகா தடுப்பூசி முகாம் ஒத்திவைப்பு: மா. சுப்பிரமணியன்
8வது மெகா தடுப்பூசி முகாம் ஒத்திவைப்பு: மா. சுப்பிரமணியன்

தொடர் விடுமுறை காரணமாக நாளை  சனிக்கிழமை நடைபெற இருந்த எட்டாவது தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்பட்டு வரும் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் காஞ்சிபுரத்தில் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா அரசு புற்றுநோய் நிலைய மருத்துவமனையை இன்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.

இங்கு சுமார் 120 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வரும் புதிய மருத்துவமனை வளாகத்தை ஆய்வு மேற்கொண்ட பின் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் ஆராய்ச்சி மையங்களில் உள்ள இயந்திரங்களையும் தொழில்நுட்பக் கருவிகளையும் அமைச்சர் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழகத்தில் 65 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த உள்ளதாகவும் இவர்களுக்கென சனிக்கிழமைகளில் நடைபெற்றுவந்த 8வது மெகா தடுப்பூசி முகாம் தொடர்விடுமுறை காரணமாக இவ்வாரம் ரத்து செய்யப்பட்டு வரும் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் எனவும் தீபாவளியைத் தொடர்ந்து விடுமுறையாக இருப்பதனால் தடுப்பூசி முகாமில் பணியாற்றும் களப்பணியாளர்கள் பலதரப்பு சங்கங்களும் தடுப்பூசி முகாமை அடுத்த வாரம் தள்ளி வைக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர். 
இந்தக் கோரிக்கையை தொடர்ந்து தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும் ஞாயிற்றுக்கிழமை விடுப்பு இருக்கும் என்கின்ற காரணத்தினாலும் தடுப்பூசி முகாமை அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நடத்துவதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆண்டுக்கு 2.5 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிப்படைகின்றனர். இந்தியாவில் இருக்கக்கூடிய புற்றுநோய் மருத்துவமனையில் காஞ்சிபுரம் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை சிறந்து விளங்குகிறது.

இந்தியாவில் மும்பையில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையை விட அதிகம் சிறப்பு விளங்கும் இந்த அண்ணா புற்றுநோய் மருத்துவமனை விளங்குகிறது.

தற்போது 120 கோடி செலவில் புதிய கூடுதல் கட்டட வசதிகள் நடைபெற்று வரும் நிலையில் மேலும் மத்திய, மாநில அரசு கூடுதல் பங்களிப்போடு 180 கோடி அதி நவீன இயந்திரங்கள் கொண்டுவரப்பட உள்ளன.  290 படுக்கைகள் உள்ளன. மேலும் கூடுதலாக 500 படுக்கைகள் கொண்டு வர உள்ளன. மொத்தம் 800 படுக்கைகள் கொண்டு வரப்படும். 

இந்தியாவிலேயே முதல் இடத்தில் உள்ள புற்றுநோய் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கும் மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு நிகராக விளங்கும் அளவிற்கு கூடுதல் வசதிகளை செய்து இந்தியாவிலேயே புற்றுநோய் சிகிச்சையால் முதலிடத்தில் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை விளங்கும் என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

முதல் தடுப்பூசி தவணை 71% பேருக்கு போடப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் இறுதிக்குள் 100% போடப்படும்.  தமிழகத்தில் டெங்குக்கு இதுவரை 495 நபர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெங்கு சிகிச்சைக்கு அனைத்து மருத்துவமனைகளிலும் தனிப் பிரிவு உள்ளது தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறைவு என்பதால் அச்சப்பட தேவையில்லை என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் க.சுந்தர் ,  சி.வி.எம்.பி எழிலரசன் ஆகியோர் உள்பட பலரும் உடன் இருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com