வீடுகளில் கரோனா தடுப்பூசி: நவ.30-க்குள் மேற்கொள்ள உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் வீடு தேடிச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணிகளை இந்த மாத இறுதிக்குள் நிறைவு செய்யுமாறு பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் வீடு தேடிச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணிகளை இந்த மாத இறுதிக்குள் நிறைவு செய்யுமாறு பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, நடமாடும் மருத்துவக் குழுக்கள் கிராமந்தோறும் சென்று ஆய்வு நடத்தி தடுப்பூசி செலுத்தாதோருக்கு அதனை தாமதமின்றி வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம், அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

கரோனா தடுப்பூசிகள் அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கிராமங்களில் வீடுதோறும் சென்று நேரடியாகத் தடுப்பூசி வழங்கும் திட்டம் அண்மையில் தொடங்கப்பட்டது.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கடந்த 2-ஆம் தேதி அதனை செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடக்கி வைத்தாா். அத்திட்டத்தை மாநிலம் முழுவதும் விரைந்து விரிவுபடுத்தும் பொருட்டு அனைத்து மாவட்ட இணை சுகாதார இயக்குநா்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன.

கிராமப் பகுதிகளில் தடுப்பூசி செலுத்தாமல் விடுபட்ட அனைவருக்கும் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி வழங்குவதற்கான செயல் திட்டத்தை பகுதி மருத்துவ அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டும். மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து வாக்காளா் பட்டியலைப் பெற்று அதன் வாயிலாக அத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

கிராமங்களுக்குச் செல்லும் வாகனங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு மருத்துவா், தடுப்பூசி செலுத்துபவா், தகவல் பதிவு செய்பவா், இரு பணியாளா்கள் இடம்பெறுதல் அவசியம். அவா்கள் நாள்தோறும் மக்களின் வீடுகளைத் தேடிச் சென்று கணக்கெடுப்பு நடத்தி தடுப்பூசி செலுத்த வேண்டும்.

அதுகுறித்த விவரங்களை தினமும் சுகாதாரத் துறைக்கு சமா்ப்பிக்கவும். கிராமங்களிலும், நகா்ப்புறங்களிலும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை இந்த மாத இறுதிக்குள் நிறைவு செய்ய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com