கூத்தாநல்லூரில் 49 நாய்கள் பிடிப்பு

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் வெறி நாய்கள் சுற்றித் திரிந்து பொது மக்களை அச்சுறுத்திக் கொண்டிருந்தது. இச்செய்தியை, தினமணி.காம்-மில், வெள்ளிக்கிழமை படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.
கூத்தாநல்லூரில் 49 நாய்கள் பிடிப்பு
கூத்தாநல்லூரில் 49 நாய்கள் பிடிப்பு


கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் வெறி நாய்கள் சுற்றித் திரிந்து பொது மக்களை அச்சுறுத்திக் கொண்டிருந்தது. இச்செய்தியை, தினமணி.காம்-மில், வெள்ளிக்கிழமை படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.

செய்தியின் எதிரொலியால், 49 நாய்கள் பிடிக்கப்பட்டுள்ளது. தினமணி.காம் செய்தியைப் பார்த்த, திருவாரூர்  மாவட்ட ஆட்சியர் பா.காயத்ரி கிருஷ்ணன், கூத்தாநல்லூரில், வெறி நாய்கள் உள்ளிட்ட தெருவில் சுற்றும் நாய்களைப் பிடிக்க ஆலோசனை தெரிவித்துள்ளார். 

ஆலோசனையின் பேரில், கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர் ராஜகோபால் உத்தரவின் பேரில், சுகாதார ஆய்வாளர் கி.அருண்குமார் மேற்பார்வையில், 49 நாய்கள் பிடிக்கப்பட்டது. இதுகுறித்து, ஆணையர் ராஜகோபால் கூறியது. நாய்களைப் பிடிக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் 10 பேர் கொண்ட குழுவினர் கும்பகோணத்திலிருந்து வந்தனர். கூத்தாநல்லூர் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளிலும், நாய் வாகனத்துடன் சுற்றினர். பெரியக் கடைத்தெரு, மேல் கொண்டாழி தமிழர் தெரு, மரக்கடை, பண்டுதக்குடி , இஸ்மாயில் தெரு, செளகத் அலி தெரு, ஜாவியாத் தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் இருந்தும், 8 வெறிப் பிடித்த நாய்கள் மற்றும் சாலையில் சுற்றித் திரிந்த 49 நாய்கள் பிடிக்கப்பட்டுள்ளன. 

பிடிக்கப்பட்ட நாய்கள், வேனில் ஏற்றப்பட்டு, கும்பகோணம் கொண்டு செல்லப்பட்டது. வெறிப்பிடித்த நாய்களுக்கு தடுப்பூசியும், சாலையில் சுற்றித் திரிந்த நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சையும் செய்யப்படும். 3 நாள்களுக்குப் பிறகு, மீண்டும் கொண்டு வந்து விடப்படும். நாய்களை வீட்டில் வளர்ப்பவர்கள், கால்நடை மருத்துவர் மூலம், தடுப்பூசியை செலுத்தவும், வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள், சாலையில் சுற்றித் திரிந்தால், பிடிக்கப்படும் என ஆணையர் ராஜகோபால் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com