விடுதலைப் போரில் தமிழகம்: புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்ட நடிகர் சிவகுமார்

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தமிழக அரசு சார்பில் வைக்கப்பட்டுள்ள விடுதலைப் போரில் தமிழகம் என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சியை நடிகர் சிவகுமார் இன்று பார்வையிட்டார்.
விடுதலைப் போரில் தமிழகம்: புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்ட நடிகர் சிவகுமார்
விடுதலைப் போரில் தமிழகம்: புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்ட நடிகர் சிவகுமார்

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தமிழக அரசு சார்பில் வைக்கப்பட்டுள்ள விடுதலைப் போரில் தமிழகம் என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சியை நடிகர் சிவகுமார் இன்று பார்வையிட்டார்.

நடிகர் சிவகுமாருக்கு கண்காட்சியில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் குறித்து செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வீ.ப. ஜெயசீலன் விளக்கிக் கூறினார். தமிழ்நாடு பாடநூல் கழக துணை இயக்குநர் சங்கர சரவணன் உடன் இருந்தார்.

இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டு கொண்டாட்டங்களை ஒட்டி தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் விடுதலைப் போரில் தமிழகம் என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சி ஒன்றை தமிழக முதல்வர் நவம்பர் 1ஆம் தேதி திறந்து வைத்தார். 

நவம்பர் 1 முதல் 8ஆம் தேதி வரை ஒருவார காலத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.‌

வரும் நவம்பர் 14ஆம் தேதி வரை பொதுமக்கள் பார்வையிட ஏதுவாக காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். பொதுமக்கள் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் இளைஞர்கள் என அனைவரும் இலவசமாக கண்டுகளிக்கலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

தமிழக அரசு, நாட்டின் விடுதலைக்கு அரும்பாடுபட்ட தலைவர்களைப் போற்றும் வகையிலும், குறிப்பாக, தமிழ்நாட்டைச் சார்ந்த தலைவர்களின் தியாகங்களை வருங்காலச் சந்ததியினரும் அறிந்துணர்ந்து பயன்பெறும் வகையிலும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், சென்னை, கோயம்பேடு புறநகர பேருந்து நிலைய வளாகத்தில் 75வது சுதந்திரத் திருநாள் கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக இந்திய விடுதலைப் போராட்ட தியாகிகளின் வீரப் பெருமிதங்களை நினைவுகூர்ந்து போற்றும் வகையில் “விடுதலைப் போரில் தமிழகம்” என்ற மாபெரும் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com