கடம்பூர் கழுங்குமலை நீர்வீழ்ச்சியில் கொட்டும் தண்ணீர்: குளித்து மகிழ குவியும் மக்கள்

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கடம்பூரில் தற்போது பெய்த மழையினால் அங்குள்ள கழுங்குமலை நீர்வீழ்ச்சியில் அதிக தண்ணீர் கொட்டுவதையடுத்து அதில் குளித்து மகிழ மக்கள் அதிகம் குவிந்துள்ளனர்.
கடம்பூர் கழுங்குமலை நீர்வீழ்ச்சியில் கொட்டும் தண்ணீர்: குளித்து மகிழ குவியும் மக்கள்
கடம்பூர் கழுங்குமலை நீர்வீழ்ச்சியில் கொட்டும் தண்ணீர்: குளித்து மகிழ குவியும் மக்கள்

தம்மம்பட்டி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கடம்பூரில் தற்போது பெய்த மழையினால் அங்குள்ள கழுங்குமலை நீர்வீழ்ச்சியில் அதிக தண்ணீர் கொட்டுவதையடுத்து அதில் குளித்து மகிழ மக்கள் அதிகம் குவிந்துள்ளனர்.

கடம்பூர் கழுங்குமலை அருவியில் நேற்று நவ.5ந் தேதி பிற்பகல்  பெய்த மழையினால் அந்த அருவியில் தண்ணீர் அதிகளவில் ஆர்ப்பரித்து கொட்டுவது பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் ரம்மியமாகவும் இருக்கிறது.

பலத்த மழை பெய்யும் காலங்களில் இந்த அருவியில் நீர் கொட்டும். தற்போது சில வருடங்களாக போதிய மழை பெய்யாத காரணத்தால் இந்த அருவியில் நீர்வரத்து இல்லாமல் இருந்தது. கடந்த 20 நாள்களாக இந்த  நீர்வீழ்ச்சியில் மிதமாக வந்த தண்ணீர், வெள்ளிக்கிழமை பிற்பகல் பெய்த பலத்த, பெரு மழையினால் கடம்பூர் அருவியில் நீர் வேகமாகவும், அதிகமாகவும் கொட்டுகிறது. 

இந்த நீர்வீழ்ச்சி கடம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியிலிருந்து மேற்கு நோக்கி சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த அருவியில் தற்போது நீர் கொட்டுவதால் அங்குள்ள மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு இடமாகவும், இது ஒரு வரப்பிரசாதமாகவும் உள்ளது. கடம்பூர் மக்களும் மற்றும் இந்த அருவியைக் காண வருபவர்களும் தெரிவிக்கின்றனர். 

அருவிக்குச் செல்லும் பாதையை சரிசெய்து தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துகொடுத்தால் அருவிக்கு செல்வது எளிதாக இருக்கும் என பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.  இந்த அருவிக்கு ஆத்தூரிலிருந்து பைத்தூர் வழியாக செல்லலாம். ஆத்தூரிலிருந்து சுமார் 16 கி.மீ. தூரத்தில் உள்ளது.



கெங்கவல்லியிலிருந்து சுமார் 9 கி.மீ. தூரத்தில் உள்ளது. தம்மம்பட்டியிலிருந்து சுமார் 21 கி.மீ. தூரத்தில் உள்ளது. தம்மம்பட்டியிலிருந்து கூடமலை மற்றும் 74 கிருஷ்ணாபுரம் வழியாக கடம்பூர் வந்து நீர்வீழ்ச்சியை கண்டுகளிக்கலாம். இந்த நீர்வீழ்ச்சிக்கு ஆத்தூர், வாழப்பாடி, தலைவாசல், வீரகனூர், தம்மம்பட்டி, உப்பிலியாபுரம் பகுதிகளிலிருந்து வந்து தற்போது நீராடி மகிழ்ந்து, தீபாவளி விடுமுறையை சந்தோஷமாகக் களிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com