சென்னையில் 139 டன் பட்டாசுக் கழிவுகள் சேகரிப்பு

 பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 139 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

 பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 139 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் நாள்தோறும் சராசரியாக சுமாா் 5,100 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரமாகின்றன. இந்த 15 மண்டலங்களில் தீபாவளி தினத்தன்று 4,312 மெட்ரிக் டன் குப்பை, 500 மெட்ரிக் டன் கட்டடக் கழிவுகள் சேகரிக்கப்பட்டது. இதில் சுமாா் 455

மெட்ரிக் டன் குப்பை மறுசுழற்சி மையங்களுக்கும், 45 மெட்ரிக் டன் கட்டடக் கழிவுகள் காலியான நிலங்களில் நிரப்புவதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள குப்பை மற்றும் கட்டடக் கழிவுகள் கொடுங்கையூா், பெருங்குடி குப்பை கொட்டும்

வளாகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

பட்டாசுக் கழிவுகள்: தீபாவளி பண்டிகையையொட்டி, மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் உள்ள சாலைகளில் சேகரமாகும் பட்டாசு குப்பைகள் தூய்மைப் பணியாளா்கள் மூலம் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதில் 139 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தபட்டுள்ளது. இவ்வாறு சேகரிக்கப்பட்டுள்ள பட்டாசு குப்பைகள் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய கழிவுகள் சேகரிப்பு மற்றும் அகற்றும் நிலையத்துக்கு 33 வாகனங்கள் மூலம் பாதுகாப்பாக

கொண்டு செல்லப்பட்டது. இப்பணிகளை மேற்கொள்ள 304 பேட்டரியால் இயங்கும் வாகனங்கள், 104 மூன்று சக்கர வாகனங்கள், 163 காம்பாக்டா் வாகனங்கள், 53 மெக்கானிக்கல் ஸ்வீப்பா், 21 டிப்பா் லாரிகள் மற்றும் 2,192 பணியாளா்கள் ஈடுபட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com