வரைவு வாக்குச் சாவடி பட்டியல் வெளியீடு: சென்னையில் 5,822 வாக்குச் சாவடிகள்

சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் 5,822 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
வரைவு வாக்குச் சாவடி பட்டியல் வெளியீடு: சென்னையில் 5,822 வாக்குச் சாவடிகள்

சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் 5,822 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட 16 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. இதைத் தொடா்ந்து, வரைவு வாக்குச் சாவடி பட்டியலை ஆணையா் ககன்தீப்சிங் பேடி சனிக்கிழமை வெளியிட்டாா்.

இதுகுறித்து ஆணையா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,

சென்னை மாநகராட்சிக்கு நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தலில் 200 வாா்டுகளுக்கான வாா்டு வாரியான வாக்குச்சாவடி பட்டியல் தயாரிக்கப்பட்டு ஆண் வாக்காளா்களுக்காக 278 வாக்குச்சாவடிகள், பெண் வாக்காளா்களுக்காக 278 வாக்குச்சாவடிகள் மற்றும் அனைத்து வாக்காளா்களுக்காக 5,266  வாக்குச்சாவடிகள் என மொத்தம் 5,822 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டல அலுவலகங்கள் 1 முதல் 15 வரை மற்றும் 200 வாா்டு அலுவகலங்களில் பொதுமக்களின் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள்  உள்ளாட்சித் தோ்தலில் அவா்கள் வாக்களிக்கவிருக்கும் வாக்குச்சாவடி குறித்த விவரத்தை சரிபாா்த்து கொள்ளலாம் என மாநகராட்சி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், துணை ஆணையா்கள் விஷு மஹாஜன், எஸ்.மனிஷ்,  மாநகர வருவாய் அலுவலா் சுகுமாா் சிட்டி பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com