ஆலங்குடி குரு பரிகார கோயிலில் குரு பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் தீவிரம்

குருபகவான் மகர ராசியிலிருந்து கும்பராசிக்கு வரும் 13 ஆம் தேதி பெயர்ச்சி அடைகிறார். இதனை முன்னிட்டு ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குரு பரிகார கோயிலில் குரு பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகி
ஆலங்குடி குருபகவான்.
ஆலங்குடி குருபகவான்.


நீடாமங்கலம்: குருபகவான் மகர ராசியிலிருந்து கும்பராசிக்கு வரும் 13 ஆம் தேதி பெயர்ச்சி அடைகிறார். இதனை முன்னிட்டு ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குரு பரிகார கோயிலில் குரு பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அருள்மிகு குருபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு வரும் 13.11.2021 சனிக்கிழமை பெயர்ச்சி அடைகிறார். இதனை முன்னிட்டு ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் குருபெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. 

குருபெயர்ச்சியை முன்னிட்டு நடைபெறும் லட்சார்ச்சனை விழாவில் பங்கேற்று அஞ்சல் மூலம் பிரசாதம் பெற்றுக்கொள்ள பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

வலங்கைமான் வட்டம், ஆலங்குடி கிராமம். இங்கு ஆபத்சகாயேஸ்வரர் குரு பரிகார கோயில் உள்ளது. திருஞானசம்மந்தரால் தேவாரம் பாடல்பெற்ற தலம். நவக்கிரகங்களில் குருபகவானுக்கு  பரிகார தலமாக விளங்குகிறது. 

சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசம் செய்யும் நாளில் குருபெயர்ச்சி விழாவும், இந்த விழாவை முன்னிட்டு குருபகவானுக்கு லட்சார்ச்சனை விழாவும் நடைபெறுவது வழக்கம். 
இந்த ஆண்டும் குருபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு வரும் 13.11.2021 சனிக்கிழமை அன்று பெயர்ச்சி அடைகிறார். இதனை முன்னிட்டு ஆலங்குடி கோயிலில் குருபெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறவுள்ளது.

குருபெயர்ச்சியை முன்னிட்டு குருபகவானுக்கு லட்சார்ச்சனை விழாவும் நடைபெறவுள்ளது. இதில் ரிஷபம், கடகம், கன்னி,விருச்சிகம் தனுசு,கும்பம் ,மீனம் மற்றும் இதர ராசிக்காரர்கள் லட்சார்ச்சனையில் பங்கேற்று பரிகாரம் செய்து கொள்ளலாம். லட்சார்ச்சனை கட்டணம் ரூ.400 ஆகும். லட்சார்ச்சனை பிரசாதமாக அருள்மிகு குருபகவான் உருவம் பொறித்த 2 கிராம் வெள்ளி டாலர் வழங்கப்படும். காசோலைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. வரைவோலை அல்லது மணியார்டர் மூலம் தொகை அனுப்புபவர்கள் உதவிஆணையர்/செயல்அலுவலர், அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரசுவாமி திருக்கோயில், ஆலங்குடி -612801. வலங்கைமான் வட்டம், திருவாரூர் மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். 

வரைவோலை எடுப்போர் கும்பகோணம் சிட்டியூனியன் வங்கி கிளையில் மாற்றத்தக்க வகையில் எடுத்து அனுப்ப கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

இத்தகவலை கோயில் தக்கார் மற்றும் உதவிஆணையர் செ.சிவராம்குமார், உதவி ஆணையர் மற்றும் செயல்அலுவலர் பி.தமிழ்ச்செல்வி ஆகியோர் தெரிவித்துள்ளனர். 

குருபெயர்ச்சி விழா நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com