காஞ்சிபுரம்: நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தோ்தலின் தொடா்ச்சியாக, நகா்ப்புற உள்ளாட்சிப் பதவிகளுக்கும் தோ்தல் நடைபெறவுள்ளது. 
காஞ்சிபுரத்தில் வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியலை ஆட்சியர் மா.ஆர்த்தி வெளியிட அதனை பெற்றுக் கொண்டார் மாநகராட்சி ஆணையாளர் எஸ்.லெட்சுமி
காஞ்சிபுரத்தில் வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியலை ஆட்சியர் மா.ஆர்த்தி வெளியிட அதனை பெற்றுக் கொண்டார் மாநகராட்சி ஆணையாளர் எஸ்.லெட்சுமி


காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான வரைவு வாக்குச்சாவடிகளின் பட்டியலை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மா.ஆர்த்தி ஞாயிற்றுக்கிழமை வெளியிட அதனை மாநகராட்சி ஆணையாளர் எஸ்.லெட்சுமி பெற்றுக்கொண்டார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தோ்தலின் தொடா்ச்சியாக, நகா்ப்புற உள்ளாட்சிப் பதவிகளுக்கும் தோ்தல் நடைபெறவுள்ளது. 

இதற்கான மாநிலத் தோ்தல் ஆணையம், இந்திய தோ்தல் ஆணையத்திடம் இருந்து வரப்பெற்றுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்க்கப்பட்டு தயாா்படுத்தப்பட்டுள்ளன.

இதன் தொடா்ச்சியாக, வார்டு வாரியாக அமைக்கப்பட இருக்கும் வரைவு வாக்குச் சாவடிகள் பட்டியலை ஆட்சியரக அலுவலகத்தில், ஆட்சியா் மா.ஆர்த்தி உள்ளாட்சிகளின் அலுவலா்கள் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட, அதனை காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் எஸ்.லெட்சுமி பெற்றுக் கொண்டார்.

நிகழ்வில், பேரூராட்சிகளுக்கான உதவி இயக்குநர் வில்லியம் ஜேசுதாஸ், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்பிரிவு) ஸ்டீபன் ஜெயச்சந்திரா, தேர்தல் பிரிவு அலுவலர் தினகரன், பேரூராட்சி அலுவலர்கள்கலந்து கொண்டனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com