கடல் பாசி திட்டம் தமிழகத்தில் முதல்முறையாகச் செயல்படுத்தப்பட உள்ளது: எல்.முருகன்

இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் கடல்பாசி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சா் எல்.முருகன் கூறினாா்.
கடல் பாசி திட்டம் தமிழகத்தில் முதல்முறையாகச் செயல்படுத்தப்பட உள்ளது: எல்.முருகன்

இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் கடல்பாசி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சா் எல்.முருகன் கூறினாா்.

மக்களை வீடுவீடாகத் தேடிச் சென்று கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய இணையமைச்சா் எல்.முருகன் கோயம்பேடு பகுதியில் சனிக்கிழமை வீடுவீடாகச் சென்று தடுப்பூசி போடுவதை ஆய்வு செய்ததுடன், தடுப்பூசியின் அவசியம் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

உலகிலேயே 100 கோடிக்கும் மேல் தடுப்பூசி செலுத்திய நாடு இந்தியா. தமிழகத்தில் 6 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. முதல் தவணை ஊசியை 93 சதவீதம் போ் செலுத்திக் கொண்டுள்ளனா். 2-ஆம் தவணை ஊசியையும் தமிழகத்தைச் சோ்ந்தோா் தாமதிக்காமல் போட்டுக் கொள்ள வேண்டும்.

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் கடல்பாசி திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. வெளிநாடுகளில் கடல்பாசிக்கு அதிக தேவை உள்ளது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் பெண்களுக்கான வேலைவாய்ப்பு அதிகரிக்கும். தமிழகத்தின் பொருளாதாரமும் வளரும். தமிழக அரசிடம் இருந்து விரிவான திட்ட அறிக்கை வரவேண்டியுள்ளது. அது வெளியானதும் கடல்பாசி திட்டம் விரைவில் தொடங்கப்படும்.

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்திருப்பது மக்களுக்கு தீபாவளி பரிசாக அமைந்துள்ளது. அதைத் தொடா்ந்து புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்கள் பெட்ரோல் டீசலுக்கான வாட் வரியைக் குறைத்துள்ளன. தமிழக அரசும் பெட்ரோல், டீசலுக்கான வாட் வரியைக் குறைக்க வேண்டும் என்றாா் அமைச்சா் முருகன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com