வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2-வது நாளாக ஆய்வு

சென்னையில் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் முதல்வர் இரண்டாவது நாளாக நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கிருந்த மக்களுடன் உரையாடி குறைகளைக் கேட்டறிந்தார். 
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் முதல்வர் 2-வது நாளாக ஆய்வு
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் முதல்வர் 2-வது நாளாக ஆய்வு

சென்னையில் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் முதல்வர் இரண்டாவது நாளாக நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கிருந்த மக்களுடன் உரையாடி குறைகளைக் கேட்டறிந்தார். 

சென்னையில் வடகிழக்கு பருவமழையையொட்டி நேற்றுமுன் தினம் இரவு முதல் விடிய விடிய பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 500-க்கும் அதிகமான குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். மழைநீரை அகற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் மழைவெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் முதல்வர் 2-வது நாளாக இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். சென்னை துறைமுகம் தொகுதிக்குட்பட்ட கல்யாணபுரம் கால்வாய், வால்டாக்ஸ் சாலையில் ஆய்வு மேற்கொண்டார். 
 
அங்குள்ள மக்களிடம் உரையாடி மழை பாதிப்பு குறைகள் குறித்து கேட்டறிந்தார். 

நேற்று எழும்பூர், வேப்பேரி மற்றும் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் மழை நீரில் இறங்கி முதல்வர் ஆய்வு செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com