Enable Javscript for better performance
பூண்டி ஏரியிலிருந்து உபரி நீர் திறப்பு 5,000 கன அடியாக அதிகரிப்பு; ஏரிகளின் நீர் இருப்பு விவரம்- Dinamani

சுடச்சுட

    பூண்டி ஏரியிலிருந்து உபரி நீர் திறப்பு 5,000 கன அடியாக அதிகரிப்பு; ஏரிகளின் நீர் இருப்பு விவரம்

    By DIN  |   Published on : 09th November 2021 02:49 PM  |   அ+அ அ-   |    |  

    WhatsApp_Image_2021-11-09_at_12

    பூண்டி ஏரியில் உபரி நீர் திறப்பு அதிகரித்ததை தொடர்ந்து கொசஸ்தலை ஆற்றில் சீறிப்பாயும் நீர்.


    திருவள்ளூர்: பூண்டி நீர்த்தேக்க நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழையால் ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் செவ்வாய்க்கிழமை காலை முதல் 5 ஆயிரம் கன அடியாக உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    சென்னை மாநகராட்சி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக திருவள்ளூர் அருகே பூண்டி ஏரி திகழ்ந்து வருகிறது. தற்போதைய நிலையில் இப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டு வருவதால் கடந்த சில நாள்களாக உபரி நீர் திறப்பு கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதையும் படிக்கலாமே.. 6 ஆண்டுகளுக்குப் பின் முழு கொள்ளளவை எட்டும் மாமண்டூர் பாசன ஏரி; விவசாயிகள் மகிழ்ச்சி

    இந்த நிலையில் பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்தேக்கத்தின் உயரம் 35 அடியாகும். 3321 மில்லியன் கன அடி கொள்ளளவு நீரை சேமிக்கலாம். இதில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி 33.64 உயரமும், 2712 மில்லியன் கன அடிநீர் இருப்பு உள்ளது. தற்போதைய நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து வரும் வெள்ள நீர், கிருஷ்ணா கால்வாய் நீர் வரத்து போன்றவைகளால் வினாடிக்கு 3256 கன அடியாகவும் உள்ளது.

    அதனால் கொசஸ்தலை ஆற்றில் 4500 லிருந்து 5000 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், அம்மம்பள்ளி அணையிலிருந்து நள்ளிரவு முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை வரையில் உபரி நீர் திறக்கப்பட்டது. இந்த நீரும் வந்தால் ஏரியின் நீர்மட்டம் உயருவதற்கான வாய்ப்பு உள்ளது. அதனால் உபரி நீர் திறப்பும் படிப்படியாக அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    புழல் ஏரியில் நிலவரம் : புழல் ஏரியின் மொத்த உயரம் 21.20 அடியும், 3300 மில்லியன் கன அடிநீர் சேமிக்கலாம். தற்போதைய நிலையில் 19.14 அடி உயரமும், 2841 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு நீர் வரத்து வினாடிக்கு 493 கன அடியாக உள்ளதால் 2188 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    செம்பரம்பாக்கம் ஏரி: செம்பரம்பாக்கம் ஏரியின் உயரம் 24 அடியும், 3645 மில்லியன் கன அடி வரையில் நீர் சேமிக்கலாம். தற்போதைய நிலையில் 20.99 அடியும், 2852 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. மேலும், ஏரிக்கு நீர் வரத்து வினாடிக்கு 100 கன அடியாக உள்ளதால், வினாடிக்கு 2144 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    சோழவரம் ஏரி: சோழவரம் ஏரியின் மொத்த உயரம் 18.86 அடியும், 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டாகும். தற்போதைய நிலையில் 17.76 அடி உயரமும், 866 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. அதோடு, ஏரிக்கான நீர் வரத்து வினாடிக்கு 1215 கன அடியாகவும், அதனால் 1215 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    கண்ணன் கோட்டை - தேர்வாய் கண்டிகை ஏரி: கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியின் மொத்த உயரம் 36.61 அடியும், 500 மில்லியன் கன அடி நீர் கொள்ளளவு கொண்டதாகும். தற்போது ஏரியில் 36.61 அடி உயரமும், 500 மில்லியன் கன அடி நீர் முழு கொள்ளவு உள்ளது. ஏரிக்கு நீர் வரத்து 70 கன அடியும், ஏரியிலிருந்து வினாடிக்கு 70 கன அடி உபரி நீர் வெளியேற்றி வருவதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp