
தொடர் கனமழை காரணமாக பெரம்பலூர், அரியலூர், மதுரை மாவட்டங்களில் நாளை மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
படிக்க | தமிழகத்தில் 3 நாள்களுக்கு அதி கனமழை தொடரும்
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நவம்பர் 11-ஆம் தேதி வட தமிழக கடலோரப் பகுதியில் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர். சென்னை உள்பட 9 மாவட்டங்களில் நவம்பர் 10, 11 ஆகிய இரு நாள்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
படிக்க | 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாள்கள் விடுமுறை
இந்நிலையில், பெரம்பலூர், அரியலூர், மதுரை மாவட்டங்களில் நாளை மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
ராமநாதபுரம், திருச்சி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.