Enable Javscript for better performance
சென்னையில் வெள்ள பாதிப்பு, மரங்களை அகற்றும் புகார்களுக்கு வாட்ஸ்ஆப் எண்கள் அறிவிப்பு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு தமிழ்நாடு

    சென்னையில் வெள்ள பாதிப்பு, மரங்களை அகற்றும் புகார்களுக்கு வாட்ஸ்ஆப் எண்கள் அறிவிப்பு

    By DIN  |   Published On : 09th November 2021 05:30 PM  |   Last Updated : 09th November 2021 06:04 PM  |  அ+அ அ-  |  

    chennai

    பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை, வெள்ளப் பாதிப்பு, மரக்கிளைகள் அகற்றம் தொடர்பான புகார்களை அளிக்க வாட்ஸ்ஆப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

    தமிழகத்தில், வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதன் காரணமாக, தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. 

    சென்னையில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

    பல இடங்களில் வெள்ளம் சூழ்வது, மரம் விழுவது போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. 

    இந்நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை, வெள்ள பாதிப்பு, மரக்கிளைகள் அகற்றம் தொடர்பான புகார்களை அளிக்க வாட்ஸ்ஆப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

    9445477205 9445025818, 9445025820 மற்றும் 9445025821 ஆகிய வாட்ஸ் ஆப் எண்களில் மக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. 


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp