
சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 4 வயது குழந்தை அனன்யா.
கும்பகோணம்: கும்பகோணம் அருகே தொடர் மழை காரணமாக புதன்கிழமை அதிகாலை சுவர் இடிந்து விழுந்ததில் 4 வயது குழந்தை உயிரிழந்தது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை முதல் தொடர் மழை பெய்தது. ஆனால் மாவட்டத்தில் அதிகபட்சமாக பேராவூரணியில் 195 மி.மீ., ஈச்சன்விடுதியில் 172 மி.மீ., தஞ்சாவூரில் 161 மி.மீ., பட்டுக்கோட்டையில் 153 மி.மீ., மதுக்கூரில் 145 மி.மீ. என பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 113.7 மி.மீ. மழை பெய்தது.
தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் 33 குடிசை வீடுகள், ஓடுகள் வேயப்பட்ட 11 வீடுகள் பகுதியாகவும், ஒரு கூரை வீடு முழுமையாகவும் சேதமடைந்தன.
இதையும் படிக்க | வேலை வேண்டுமா...? இஸ்ரோவில் மொழிப்பெயர்பாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
இடிந்து விழுந்த அனன்யா வீட்டு சுவர்.
இந்நிலையில், கும்பகோணம் அருகே தேனாம்படுகை கிராமத்தைச் சேர்ந்த கௌதம் வீட்டில் மண் சுவர் இடிந்து விழுந்தது. இந்த இடுபாடுகளில் கௌதம் (28), இவரது மனைவி மற்றும் குழந்தை அனன்யா (4) சிக்கி பலத்த காயமடைந்தனர். இவர்களில் அனன்யா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இதையும் படிக்க | தடுப்பூசி செலுத்தியவர்கள் கரோனாவால் உயிரிழக்கும் வாய்ப்பு 16 மடங்கு குறைவு; ஆய்வில் வெளியான புதிய தகவல்
மேலும், கும்பகோணம் அருகே தேப்பெருமாநல்லூர் பெரியார் நகரில் ஓட்டு வீடு இடிந்து விழுந்ததில் கனகராஜ் (37), சுந்தரி (32) காயமடைந்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.