ஈரோடு: கால்நடைகளுக்கு 2வது சுற்று கோமாரி தடுப்பூசி போடும் திட்டம் 

ஈரோடு மாவட்டத்தில் 2.80 லட்சம் கால்நடைகளுக்கு 2-வது சுற்று கோமாரி தடுப்பூசி போடும் பணியை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்.
ஈரோடு: கால்நடைகளுக்கு 2வது சுற்று கோமாரி தடுப்பூசி போடும் திட்டம் 
ஈரோடு: கால்நடைகளுக்கு 2வது சுற்று கோமாரி தடுப்பூசி போடும் திட்டம் 

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் 2.80 லட்சம் கால்நடைகளுக்கு 2-வது சுற்று கோமாரி தடுப்பூசி போடும் பணியை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்.

ஈரோடு மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் கால்நடைகளை கோமாரி நோய் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணியின் தொடக்க விழா, ஈரோடு பெரியசடையம்பாளையத்தில் இன்று நடந்தது. 
நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணியினை தொடங்கி வைத்தார். 

இதைத்தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஈரோடு மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 2 லட்சத்து 80ஆயிரம் கால்நடைகள் உள்ளன. இதில், 4 மாதங்களுக்கு மேல் உள்ள கன்றுகளுக்கும், சினை மாடுகளுக்கும் அதாவது நிறைமாத சினை மாடுகளை தவிர அனைத்து பசுவினம், எருமையின மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி 2.வது சுற்று போடும் பணி இன்று தொடங்கியுள்ளது. இந்த தடுப்பூசியானது வரும் 21 நாட்கள் அதாவது 30ம் தேதி வரை போடப்படும். இந்த தடுப்பூசி போடும் பணிகளுக்காக கால்நடை உதவி மருத்துவர்கள் தலைமையில் 96குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

எனவே, கால்நடை வளர்போர், தங்களது கால்நடைகளுக்கு தடுப்பூசியினை செலுத்தி கோமாரி நோயில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம். ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து துறை அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர். நேற்று கூட பர்கூர் மலைப் பாதையில் மண்சரிவு ஏற்பட்டது. உடனடியாக அவை போர்க்கால அடிப்படையில் சரிசெய்யப்பட்டு போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் கனரக வாகனங்கள் மட்டும் செல்ல தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடம்பூர் பகுதியில் மக்களுக்கு என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அவை மேம்பாலமாக இருந்தாலும் சரி  அல்லது வேறு எந்த நடவடிக்கை வேண்டுமோ எடுக்கப்படும். மழையை பொருத்தவரை ஒவ்வொரு மாவட்டத்தில் எந்த மாதிரியான சூழ்நிலை நிலவுகிறதோ அதற்கு தகுந்தார்போல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com