
காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று வியாழக்கிழமை மாலை கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் நகர்ந்து வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று வியாழக்கிழமை(நவ.11) மாலை சென்னை அருகே கரையை கடக்கும்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 170 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.
புதுச்சேரியில் இருந்கு கிழக்கு திசையில் 170 கி.மீ. தொலைவில் தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது.
இதையும் படிக்க | கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து சென்னை அருகே மாலை கரையை கடக்கிறது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 40 கி.மீ முதல் 45 கி.மீ வேகத்தில் காற்று வீசும். மக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: முறைகேடு உறுதி செய்த பிறகும் தேர்வை ரத்து செய்யாதது ஏன்?: உயர்நீதிமன்றம் கேள்வி
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதி, மன்னார் வளைகுடா பகுதி மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதி, தமிழக கடலோரப் பகுதி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் 65 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுட்டுள்ளது.