
கோப்புப்படம்
பள்ளிளுக்கு மட்டும் விடுமுறை
கிருஷ்ணகிரி: தொடர் மழையின் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிளுக்கு மட்டும் இன்று வியாழக்கிழமை(நவ.11)விடுமுறை அளிக்கப்படுவதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வி ஜெயச்சந்திர பானு ரெட்டி அறிவித்துள்ளார்.
இந்திய வானிலை ஆய்வு மையம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூடுதலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது. அதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாகவும், கல்லூரிகள் வழக்கம் போல செயல்படும் என அவர் தெரிவித்துள்ளார்.