
கொசஸ்தலை ஆற்றில் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு.
திருவள்ளூர்: திருவள்ளூர் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. அதில் புழல் ஏரியில் நீர்வரத்து 10,690 கன அடிநீர் வரத்து அதிகரித்துள்ளதால், பாதுகாப்பு கருதி 2,218 கன அடி நீர் வெளியேற்றம் செய்து வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பூண்டி ஏரி
பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம்: பூண்டி நீர்த்தேக்கத்தின் உயரம் 35 அடியும், 3231 மில்லியன் கன அடி வரையில் நீரை சேமிக்கலாம். தற்போது நீர்த்தேக்கத்தில் 32.73 அடி உயரமும், 2444 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. அதோடு நீர் வரத்து வினாடிக்கு 7,973 கன அடியாக உள்ளதால், வினாடிக்கு 5,195 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
புழல் ஏரியில் இருந்து 2,218 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
புழல் ஏரி: புழல் ஏரியின் மொத்த உயரம் 21.20 அடியும், 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டதாகும். தற்போதைய நிலையில் ஏரியில் 19.20 அடி உயரமும், 2,853 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. மேலும் நீர் வரத்து வினாடிக்கு 10,690 கன அடியாக உள்ளதால் 2,218 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
இதையும் படிக்க | நீடிக்கும் கனமழையால் நிறைவடையாத சம்பா, தாளடி நடவுப் பணிகள்!
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2,151 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
செம்பரம்பாக்கம் ஏரி: செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரம் 24 அடியும், 3645 மில்லியன் கன அடி நீர் கொள்ளளவு கொண்டதாகும். தற்போதைய நிலையில் 20.48 அடி உயரமும், 2,722 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு நீர் வரத்து வினாடிக்கு 5240 கன அடியாக உள்ளதால் 2,151 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
இதையும் படிக்க | டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு: முறைகேடு உறுதி செய்த பிறகும் தேர்வை ரத்து செய்யாதது ஏன்?: உயர்நீதிமன்றம் கேள்வி
சோழவரம் ஏரி: சோழவரம் ஏரியின் உயரம் 18.86 அடியும், 1081 மில்லியன் கன அடி கொண்டதாகும். தற்போதைய நிலையில் 17.90 அடி உயரமும், 887 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. மேலும், நீர் வரத்து வினாடிக்கு 6,737 கன அடியாக உள்ளதால் 2015 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
கண்ணன் கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரி: கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியின் மொத்த உயரம் 36.61 அடியும், 500 மில்லியன் கன அடிநீர் சேமித்து வைக்கலாம். தற்போதைய நிலையில் 36.61 அடி உயரமும், 500 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு நீர் வரத்து வினாடிக்கு 215 கன அடியாக உள்ளதால், 215 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.