
புதுச்சேரி துறைமுகத்தில் ஏற்றப்பட்ட 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு.
புதுச்சேரி: புதுச்சேரியில் புயல் அச்சம் காரணமாக 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு வியாழக்கிழமை ஏற்றப்பட்டது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலையால், வியாழக்கிழமை காரைக்கால்- சென்னை( ஶ்ரீஹரிகோட்டா) இடையே கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகம், புதுவைக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து புதுச்சேரி துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பபட்டது.
கடல் பகுதியில் புயல் காற்றுடன் மழை பெய்யக் கூடிய வானிலையால் துறைமுகத்துக்கு அச்சுறுத்தல் உள்ளது, என்பதற்கான உள்ளூர் முன்னறிவிப்பாக இந்தப் புயல் கூண்டு ஏற்றப்பட்டது.
இதையும் படிக்க | காற்றழுத்த தாழ்வு மண்டலம் எப்போது கரையை கடக்கும்?
புதுச்சேரியில் கடல் சீற்றம்
புதுச்சேரியில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. வழக்கத்துக்கு மாறாக, கடற்கரையோரம் கடல் அலைகள் சீற்றத்துடன் உள்ளது. இதனால் புதுச்சேரி மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தி வைத்துள்ள படகுகளை மீனவர்கள் பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரியில் தொடர்ந்து புதன்கிழமை இரவு முதல் அதிகாலை வரை பரவலாக மழை பெய்தது. வியாழக்கிழமை காலை நிலவரப்படி 37 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
இதையும் படிக்க | சென்னை வாழ் மக்களுக்கு நல்ல செய்தி: கனமழை ஆபத்து விலகியது
புதுச்சேரியில் இதுவரை 45 ஏரிகள் நிரம்பியுள்ளன. 25 வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளன. தாழ்வான பகுதியில் உள்ளவர்கள் மீட்கப்பட்டு 197 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.