
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் எஸ் பாலசந்திரன்
சென்னை: காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து சென்னைக்கு அருகே இன்று மாலை கரையை கடக்கும் என்றும், காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் என்பதால் எப்போது கரையை கடக்கும் நேரத்தை குறிப்பிட்டு சொல்ல முடியாது என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் எஸ் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் செவ்வாய்க்கிழமைபுதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உறுவானது. இதன் காரணமாக தமிழகத்தில் 3 நாள்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், காற்றின் திசை மாறுபாடு காரணமாக, காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கு திசையில் 170 கிமீ. தூரத்தில் உள்ளது. இது மேற்கு- வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருவதால் சென்னைக்கு அருகே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது கரையை கடக்கும் போது மணிக்கு 40 கி.மீ முதல் 45 கி.மீ. வேகத்தில் காற்று வேகமாக வீசும் என்பதால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 40 கி.மீ முதல் 45 கி.மீ வேகத்தில் காற்று வீசும். மக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | குடிநீர் வழங்கும் ஏரிகளில் மழைநீர் வரத்து அதிகரிப்பு: புழல் ஏரிக்கு 10,690 கன அடி நீர்வரத்து
மேலும் இது புயலாக மாறுவதற்கு வாய்ப்பில்லை. புயல் என்றால் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மட்டுமே பாதிப்பு ஏற்படும். இது காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் என்பதால் இது நகரும் திசையெல்லாம் பாதிப்புகளை ஏற்படுத்தும். காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் என்பதால் எப்போது கரையை கடக்கும் என்ற நேரத்தை குறிப்பிட்டு சொல்ல முடியாது. காரணம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அகன்ற பகுதி அதனால் இது எந்த நேரத்தில் கரையை கடக்கும் என்பதை சொல்ல முடியாது. மேலும் இது கரையை கடப்பது காலை, மாலை, இரவு என்று மட்டுமே சொல்ல முடியும்.
வடகிழக்கு பருவமழை காலத்தில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கொடுப்பது இயல்பான மழையே. இதில் அதிகம் என்றெல்லாம் இல்லை.
இதையும் படிக்க | எந்த சூழ்நிலையையும் எதிா்கொள்ள விமானப் படை தயாராக இருக்க வேண்டும்: மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங்
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதி, மன்னார் வளைகுடா பகுதி மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதி, தமிழக கடலோரப் பகுதி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் 65 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுட்டுள்ளது.