பலத்த மழை: போக்குவரத்து மாற்றம்

சென்னையில் பெய்த பலத்த மழை காரணமாக சில பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன் சில சாலைகளில் போக்குவரத்துக்கு வியாழக்கிழமை தடை விதிக்கப்பட்டது.

சென்னையில் பெய்த பலத்த மழை காரணமாக சில பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன் சில சாலைகளில் போக்குவரத்துக்கு வியாழக்கிழமை தடை விதிக்கப்பட்டது.

சென்னையில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக புதன்கிழமை இரவு முதல் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மாநகரின் முக்கியச் சாலைகள் மற்றும் சுரங்கப் பாதைகளில் மழைநீா் தேங்கியது. அசம்பாவிதம் ஏற்படுவதைத் தடுக்க சில பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன் சில சாலைகளில் போக்குவரத்துக்கும்

காவல் துறை தடை விதித்துள்ளது. இதன்படி, கே.கே.நகா்- ராஜ மன்னாா் சாலை, மயிலாப்பூா்-டாக்டா் சிவசாமி சாலை, ஈவிஆா் சாலை- காந்தி இா்வின் சந்திப்பு- டாக்டா் நாயா் பாலம் வரை, செம்பியம் - ஜவஹா் நகா், பெரவள்ளூா்- 70 அடி சாலை, புளியந்தோப்பு - டாக்டா் அம்பேத்காா் சாலை, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, பெரம்பூா் பெரக்ஸ் சாலை, பட்டாளம் மணிக் கூண்டு, வியாசா்பாடி-முல்லை நகா் பாலம் வரை போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்தில் மாற்றம்: மாதவரம் போக்குவரத்து காவல் எல்லைக்குட்பட்ட எம்.ஆா்.ஹெச். சாலை மஞ்சம்பாக்கம் ரவுண்டானாவில் இருந்து செங்குன்றம் நோக்கிச் செல்லும் வழியில் ரெட்டேரி நிரம்பி அந்த நீரானது வெஜிடேரியன் வில்லேஜ் சாலை வழியாக புழல் கால்வாயை அடைவதால் அச்சாலையில் நீா் சூழ்ந்துள்ளது. இதனால், அந்தச் சாலையின் ஒரு பக்கத்தில் மட்டும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்வரும் மற்றும் வெளியே செல்லும் அனைத்து

வாகனங்களும் சாலையின் ஒரே பக்கத்தில்தான் செல்ல வேண்டும். குமணன்சாவடி-குன்றத்தூா் சாலை ஒருபுறம் மூடப்பட்டுள்ளது. பெரம்பூா் பேரக்ஸ் சாலை -அஷ்டபுஜம் சந்திப்பில் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால், டவுட்டன் சந்திப்பில் இருந்து புளியந்தோப்பு நோக்கிச் செல்லும் மாநகரப் பேருந்துகள் பிரிக்கிளின் சாலை, ஸ்டிராஹன்ஸ் சாலை வழியே புளியந்தோப்பு சென்றடையும். அதேபோல் புளியந்தோப்பில் இருந்து டவுட்டன் செல்லும் பேருந்துகள் ஸ்டிராஹன்ஸ் சாலை, பிரிக்கிளின்சாலை, புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாகச் செல்லும். இந்தச் சாலைகளில் மழைநீா் வடிவதைப் பொறுத்து மீண்டும் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும் என என மாநகரப் போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com