தஞ்சை ராமமூர்த்தி காலமானார்

மூத்த அரசியல்வாதியும், எழுத்தாளரும், வழக்குரைஞருமான தஞ்சை அ. ராமமூர்த்தி (87) உடல்நலக்குறைவு காரணமாக  சென்னையில் தனியார் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தார்.
தஞ்சை ராமமூர்த்தி.
தஞ்சை ராமமூர்த்தி.

தஞ்சாவூர்: மூத்த அரசியல்வாதியும், எழுத்தாளரும், வழக்குரைஞருமான தஞ்சை அ. ராமமூர்த்தி (87) உடல்நலக்குறைவு காரணமாக  சென்னையில் தனியார் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தார்.

தஞ்சையார் என அனைவராலும் அழைக்கப்படும் இவர் இளமைக்காலம் முதல் சமூகச் சிந்தனையாளர். தொடக்கத்தில் திராவிடச் சிந்தனையில் இருந்த இவர் காங்கிரசில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர். 

காமராஜர், இந்திரா காந்தி போன்றவர்களுடன் இணைந்து பணியாற்றிய இவர் பின்னர், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி காமராஜ் காங்கிரஸ், ஜனதா தளம் போன்றவற்றிலும் பணியாற்றியவர். 

ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக அரசியலில் இருந்த இவர் விலகி சமூக மற்றும் தமிழ்ப் பணியில் ஈடுபட்டு வந்தார். தமிழ் அமைப்புகளில் முழு வீச்சில் செயல்பட்டு பல்வேறு இயக்கங்களில் கலந்து கொண்டார்.

இவருக்கு வயது மூப்பு காரணமாக உடல்நிலை குறைவு ஏற்பட்டதால் சில நாள்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

இந்நிலையில், இவர் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை காலை மருத்துவமனையில் காலமானார்.

இவருக்கு மனைவி சரஸ்வதி, மகள் அம்மு, மகன் அப்பு உள்ளனர்.

இவரது உடல் தஞ்சாவூர் சீனிவாசபுரம் கிரி சாலையிலுள்ள இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டு. சனிக்கிழமை இறுதிச் சடங்கு நடத்தப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com