
ஓசூர் அருகே வீட்டுச் சுவர் இடிந்து விழுந்து முதியவர் பலி
ஓசூர்: ஓசூர் அருகே கனமழை காரணமாக வீட்டு சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் முதியவர் உயிரிழந்தார்.
கிருஷ்கிரி மாவட்டம், ஓசூர் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதில் ஓசூர் அடுத்த மூக்கண்டப்பள்ளி உள்ள எம்.எம் நகர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணப்பா(70) முதியவரின் கூரை வேயப்பட்ட வீட்டு சுவர் வெள்ளிக்கிழமை நள்ளிரவு இடிந்து விழுந்தது.
படிக்க | மழையால் அல்ல, ஊழலால்!
இதில், தனியாக இருந்து வந்த கிருஷ்ணப்பா சுவர் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே உயிரிழந்தார்.
படிக்க | கா்நாடகம்: அரசு பேருந்துகளில் கைப்பேசியில் பாடல் கேட்க தடை
இதுதொடர்பாக தகவலறிந்த சிப்காட் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நேரில் ஆய்வு செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.