குமரி மாவட்டத்தில் இரவு முழுவதும் கன மழை: முக்கிய சாலைகள் துண்டிப்பு

வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் கன மழை பெய்து வருகிறது.
குடியிருப்பு பகுதிகளில் புகுந்து குளம் போல் காட்சியளிக்கும் மழை வெள்ள நீர்.
குடியிருப்பு பகுதிகளில் புகுந்து குளம் போல் காட்சியளிக்கும் மழை வெள்ள நீர்.


நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் கன மழை கொட்டியது.

வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் கன மழை பெய்து வருகிறது.

குமரி மாவட்டத்தில் கடந்த 3 வாரத்துக்கும் மேலாக மழை கொடடி தீர்த்து வருகிறது. வெள்ளிக்கிழமை மாலை தொடங்கிய மழை இரவு முழுவதும் விடாமல் பெய்தது.

இதனால் அணைகளுககு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் அணைகளிலிருந்து அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டதால் கோதையாறு, வள்ளியாறு, பழையாறு, குழித்துறை தாமிரபரணி ஆறு மற்றும் பரளியாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் மணக்காலையில் இருந்து படந்தாலுமூடு செல்லும் அதங்கோடு சாலையில் வெள்ளம் புகுந்து குளம் போல் காட்சியளிக்கிறது.

குமரி மாவட்டத்தில் மழையினால் கடந்த 2 நாள்களில் 60 வீடுகள் இடிந்து விழுந்தன. இதுவரை 125 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. 

ஈசாந்திமங்கலம், அருகேயுள்ள நங்காண்டி கிராமத்தை வெள்ளம் சூழ்ந்ததால் அங்கு ள்ள 18 குடும்பங்களைச் சேர்ந்த வர்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர். அவர்களை தீயணைப்பு படையினர் மீட்டு பாதுகாப்பு முகாமில் தங்க வைத்தனர்.

தோவாளை வட்டத்தில் 8 இடங்களிலும், கல்குளம் வட்டத்தில் 2 இடங்களிலும் உள்பட மாவட்டம் முழுவதும் 17 பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில், 120 குடும்பங்களைச் சேர்ந்த 380 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தேரேகால் புதூர் நாஞ்சில் நகர் பகுதியிலும், திருப்பதி சாரம் பகுதியிலும் 
வீடுகளில் புகுந்த வெள்ளத்தால் சிக்கிய மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்.

தற்போது சனிக்கிழமையும் தொடர்ந்து 3 ஆவது நாளாக கனமழை நீடிக்கிறது. ஏற்கெனவே கன மழை பெய்து குமரி மாவட்டமே வெள்ள காடாக காட்சி அளிக்கிறது‌, தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com