தொடர் மழையால் எடப்பாடி அருகே ஏரி நிரம்பியது: கரையோரப் பகுதி மக்கள் சிறப்பு முகாம்களில் தஞ்சம்

எடப்பாடி அடுத்த வெள்ளாலபுரம் பகுதியில் உள்ள ஏரி நிரம்பிய நிலையில், பாதுகாப்பு கருதி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்கள் சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 
எடப்பாடி அடுத்த வெள்ளாலபுரம் பகுதியில் உள்ள ஏரி நிரம்பி வழிகிறது.
எடப்பாடி அடுத்த வெள்ளாலபுரம் பகுதியில் உள்ள ஏரி நிரம்பி வழிகிறது.


எடப்பாடி: எடப்பாடி அடுத்த வெள்ளாலபுரம் பகுதியில் உள்ள ஏரி நிரம்பிய நிலையில்,  பாதுகாப்பு கருதி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்கள் சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

கொங்கணாபுரம் ஒன்றியத்திற்குள்பட்ட வெள்ளாலபுரம் ஊராட்சி, இங்குள்ள மிகப்பெரிய ஏரி அண்மையில் பெய்த தொடர் கனமழையால் நேற்று மாலை நிரம்பி வழிய தொடங்கியது. 

வெள்ளாலபுரம் ஊராட்சி ஏரியில் இருந்து வெளியேறிய உபரிநீர் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த நிலையில், அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளித்து வருகிறது.

தொடர்ந்து ஏரிக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்து வந்த நிலையில், ஏரியின் பாதுகாப்பு கருதி ஏரியின் பாதுகாப்பினை கருதி ஏரிக்கு வரும் உபரி நீர் முழுவதும்  வெளியேற்றப்பட்டு வருகிறது. 

ஏரியில் இருந்து வெளியேறிய உபரிநீர் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த நிலையில், அப்பகுதி முழுவதும்  வெள்ளக்காடாக காட்சி அளித்து வருகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது.

குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த நிலையில்,  வெள்ளக்காடாக காட்சியளிக்கும் ஏரியில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீர். 

இதனையடுத்து பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் தங்கும் வகையில் அருகிலுள்ள தொடக்கப்பள்ளியில் வருவாய்த்துறையினர் சிறப்பு முகாம்களை அமைத்துள்ளனர். 

வெள்ளாளப்பட்டி ஏரி கரையோரங்களில் வெள்ள நீர் சூழ்ந்த சுமார் 38 குடியிருப்புகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

சிறப்பு முகாம்களில் உள்ள பொதுமக்கள்.

சிறப்பு முகாம்களில் உள்ள பொதுமக்களை நேரில் சந்தித்து சங்ககிரி கோட்டாட்சியர் வேடியப்பன் அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். 

தொடர்ந்து அப்பகுதியில் மழைப்பொழிவு இருந்து வரும் நிலையில், எடப்பாடி வட்டாட்சியர் விமல் பிரகாஷ், கொங்கணாபுரம் வருவாய் ஆய்வாளர் நதியா, கிராம நிர்வாக அலுவலர் இளவரசன் உள்ளிட்ட வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com