Enable Javscript for better performance
Coimbatore student suicide case: Inquiry ordered- Dinamani

சுடச்சுட

    கோவை மாணவி தற்கொலை விவகாரம்: விசாரணைக்கு உத்தரவு

    By DIN  |   Published on : 15th November 2021 06:10 PM  |   அ+அ அ-   |    |  

    Coimbatore student suicide case: Inquiry ordered

     

    கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து முதன்மை கல்வி அலுவலர் விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இதுபோன்ற பாலியல் சம்பவம் இனி நடபெறாத வகையில் 23-ஆம் தெதி கல்வி அலுவலகர்கள் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கோவை உக்கடத்தை சேர்ந்த 17 வயது மாணவி அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். வியாழக்கிழமை மாணவியின் பெற்றோர் மற்றும் தங்கை வெளியே சென்றிருந்தனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த மாணவி திடீரென வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    படிக்கதினமணி.காம் செய்தி எதிரொலி: சாதனை சிறுவனுக்கு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பாராட்டு

    இதுகுறித்த புகாரின் பேரில் உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், மாணவியின் தற்கொலைக்கு, அவர் முன்பு படித்த பள்ளியின் ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துதான் காரணம் என்பது தெரியவந்தது. 

    உரிய நீதி கிடைக்கும் வரை உடலை வாங்க மறுத்து உறவினர்கள் உள்பட பொதுமக்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மாணவி தற்கொலை செய்துகொண்ட புகாரில் ஆசிரியர், பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டனர். 

    இந்நிலையில், இது தொடர்பாக  முதன்மை கல்வி அலுவலர் விசாரணை நடத்தி அறிக்கை தர முதன்மை கல்வி அலுவலருக்கு பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp