
சென்னை, கோவை மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை மற்ற மாவட்டங்களை விட அதிகரித்து காணப்படுகிறது.
சென்னையில் 1,255 பேரும், கோவையில் 1,175 பேரும் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் இன்று (நவ.15) புதிதாக 122 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோவையில் 123 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
படிக்க | தமிழகத்தில் புதிதாக 802 பேருக்கு கரோனா; 12 பேர் பலி
இதற்கு அடுத்தபடியாக ஈரோட்டில் 77 பேரும், செங்கல்பட்டில் 62 பேரும், திருப்பூரில் 49 பேரும், சேலத்தில் 39 பேரும், திருச்சியில் 37 பேரும், நாமக்கல்லில் 35 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாநிலம் முழுதும் 1,00,764 பேருக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் 480 பேருக்கும், பெண்கள் 322 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று 918 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 9,488 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.