Enable Javscript for better performance
தினமணி.காம் செய்தி எதிரொலி: சாதனை சிறுவனுக்கு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பாராட்டு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு தமிழ்நாடு

    தினமணி.காம் செய்தி எதிரொலி: சாதனை சிறுவனுக்கு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பாராட்டு

    By DIN  |   Published On : 15th November 2021 05:32 PM  |   Last Updated : 15th November 2021 05:37 PM  |  அ+அ அ-  |  

    WhatsApp_Image_2021-11-15_at_4

    சாதனை சிறுவன் மதுரம் ராஜ்குமாருக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டிய தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர் பவானி.


    வாழப்பாடி: 10 வயதிலேயே 5 நுால்கள் எழுதி  முனைவர் பட்டம் பெற்ற சிறுவன் குறித்து, குழந்தைகள் நாளையொட்டி தினமணி.காமில் வெளியிட்டதின் எதிரொலியாக, இச்சிறுவனுக்கு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், சேலம் மண்டல     துணை இயக்குநர் நேரில் சந்தித்துப் பாராட்டுகளை தெரிவித்தார்.

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டியை சேர்ந்தவர் தனியார் பால்பண்ணை நிறுவன காவலாளி செல்வக்குமார் -– விஜயலட்சுமி தம்பதியரின் மகன் மதுரம் ராஜ்குமார் (12). வாழப்பாடி அடுத்த மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். 

    9 வயதிலேயே இச்சிறுவன் கவிதைகளை எழுதத்தொடங்கினான். இவரது கவிதைகளை சேகரித்த இவரது பெற்றோர்,  ‘நல் விதையின் முதல் தளிர்‘ என்ற தலைப்பில் நுாலாக வெளியிட்டனர். 

    சிறுவன் மதுரம் பற்றி வெளியான கட்டுரை: 10 வயதில் 5 கவிதை நுால்கள் வெளியிட்டு முனைவர் பட்டம் பெற்ற சிறுவன்

    இதனையடுத்து, 2018 டிசம்பர் 11ல் தொடர்ந்து 10 மணிநேரம் பல்வேறு தலைப்புகளில் 173  கவிதைகளளை எழுதி உலக சாதனை படைத்தான். கல்வி அலுவலர்கள், கவிஞர்கள், இலக்கிய அமைப்பினர் பலரும் இச்சிறுவனை பாராட்டினர். இச்சிறுவனின் உலக சாதனை கவிதைகள்  தமிழ் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்ட நூலாக வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலை அரசு நுாலகங்களுக்காக நிகழாண்டு தமிழக அரசு கொள்முதல் செய்துள்ளது.

    2020-ல்  பாரதியாரின் 110 ஆத்திச்சூடிகளுக்கும் கவிதை எழுதி பாரதியார் ஆத்திச்சூடி மதுரம் கவிதைகள் என்ற நுாலையும், திருக்குறளின் 133 அதிகாரத்திற்கும் ஒரு கவிதை எழுதி திருக்குறள் மதுரம் கவிதைகள் என்ற தனது நான்காவது  நூலையும் சிறுவன் மதுரம் ராஜ்குமார் வெளியிட்டார்.

    அப்துல் கலாமின் நினைவாக “காலத்தை வென்ற கலாம்” என்ற தலைப்பில் இச்சிறுவன் எழுதிய கவிதைகள் நூல்,  அண்மையில் ‘எழுதுக’ அமைப்பின் வாயிலாக  தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில், தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களால் வெளியிடப்பட்டது.

    விடுமுறை நாள்களில் இலக்கிய அமைப்புகள் நடத்தும் விழாக்களில் பங்கேற்று கவிதைபாடி வரும் இச்சிறுவனுக்கு வாழப்பாடி இலக்கிய பேரவை இளம் கம்பன் விருது வழங்கி கெளரவித்தது. இச்சிறுவனின் கவிப்புலமை கண்ட சர்வதேச தமிழ்ப்பல்கலைக்கழம், 2019 ஏப்ரல் 14ந்தேதி சென்னையில் நடைபெற்ற விழாவில் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி பாராட்டியது. 

    சிறுவன் மதுரத்தின் சாதனை.. தொடர்ந்து 10 மணிநேரம் 173  கவிதைகள் எழுதி உலக சாதனை

    நவம்பர் 14 தேசிய குழந்தைகள் தினத்தையொட்டி தினமணி.காமில், இச்சிறுவன் குறித்த விரிவான சிறப்புக் கட்டுரை வெளியானது. 

    தினமணி.காம் சிறப்புக் கட்டுரை வாயிலாக இச்சிறுவன் குறித்து அறிந்த  தமிழ் வளர்ச்சித்துறை சேலம் மண்டல துணை இயக்குநர் பவானி,  திங்கள்கிழமை, மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்குச் சென்று, சாதனை சிறுவன் மதுரம் ராஜ்குமாரை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து பாராட்டினார். பள்ளித் தலைமையாசிரியை விஜயா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் உடனிருந்தனர். 


     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp