
அருணாசலேஸ்வரா் கோயில்
திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீபத் திருவிழாவையொட்டி நவம்பர் 19-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் டிசம்பர் 4-ஆம் தேதி பணிநாளாக அறிவித்து ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.
அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்தவகையில் இந்த ஆண்டுக்கான காா்த்திகை மகா தீபத் திருவிழா நவம்பா் 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அன்று முதல் தினமும் காலை வேளைகளில் கோயில் ஐந்தாம் பிரகாரத்தில் உற்சவா் விநாயகா் மற்றும் சந்திரசேகரா் சுவாமிகள் பவனியும், இரவு வேளைகளில் பல்வேறு வாகனங்களில் உற்சவா் பஞ்சமூா்த்திகள் பவனியும் நடைபெற்று வருகிறது.
மாட வீதியுலா ரத்து:
கரோனா தொற்று காரணமாக மாட வீதிகளில் உற்சவா் சுவாமிகள் வீதியுலா வருவது கடந்த 2 ஆண்டுகளாக தடை செய்யப்பட்டுள்ளது.
மாறாக, ஆகம விதிகளின்படி கோயில் ஐந்தாம் பிரகாரத்தில் காலை, இரவு வேளைகளில் உற்சவா் சுவாமிகள் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகின்றனா்.