Enable Javscript for better performance
தீபாவளிக்குப் பிறகு தமிழகத்தில் கரோனா நிலவரம் எப்படி இருக்கிறது?- Dinamani

சுடச்சுட

    தீபாவளிக்குப் பிறகு தமிழகத்தில் கரோனா நிலவரம் எப்படி இருக்கிறது?

    By DIN  |   Published on : 15th November 2021 03:19 PM  |   அ+அ அ-   |    |  

    New vulnerability in Tamil Nadu continues to decline

    தமிழகத்தில் புதிய பாதிப்பு குறையும் போக்கு தொடருகிறது


    சென்னை: சென்னையைப் போன்றே, தமிழகத்திலும், நாள்தோறும் பதிவாகும் புதிய கரோனா பாதிப்பு குறையும் போக்கு தொடருகிறது என்கிறது கரோனா நிலவரம்.

    தமிழகத்தில் ஞாயிறன்று புதிதாக 805 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அதில், அதிகபட்சமாக சென்னையில்தான் 218 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    அதேவேளையில், தமிழகத்தில் கரோனா பரிசோதனை செய்பவர்களில் உறுதி செய்யப்படும் டிபிஆர் இந்த மாதத் தொடக்கத்தில் 0.6 சதவீதமாக இருந்த நிலையில் இது தற்போது 1 சதவீதமாக உள்ளது. அதற்குக் காரணம், சென்னையில் கரோனா பரிசோதனை செய்யப்படுவோர் எண்ணிக்கை 20 ஆயிரத்திலிருந்து 12,300 ஆகக் குறைந்திருப்பதுதான்.

     

    தமிழகத்தில் அதிக பாதிப்பு கொண்ட கோவையிலும் கூட இதே நிலைதான் நீடிக்கிறது. ஆனால், கரோனா பரிசோதனை குறைக்கப்படாமல் அதே எண்ணிக்கையில் இருந்த போதும், கரோனா உறுதி செய்யப்படுவோரின் விகிதமானது 1.3% லிருந்து 1.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஞாயிறன்று இங்கு 125 பேருக்கு கரோனா உறுதியானது.

    இவ்விரு மாவட்டங்களிலும் கரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதம் 98 சதவீதமாக உள்ளது. இவ்விரு மாவட்டங்களிலும் தற்போது ஒருசேர 2,300 கரோனா நோயாளிகள் உள்ளனர். தமிழகம் முழுவதும் 9,616 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது கடந்த சனிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் 15 சதவீதம் குறைவாகும்.

    கடந்த 24 மணி நேரத்தில் 11 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இவர்கள் அனைவரும் இணை நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள். இதனால், தமிழகத்தில் கரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 36,284 ஆக உயர்ந்துள்ளது. நாட்டிலேயே பலி எண்ணிக்கையில் தமிழகம் மகாராஷ்டிரம், கர்நாடகத்தைத் தொடர்ந்து 3வது இடத்தில் உள்ளது.

    சீனம், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கரோனா அலை அடிக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், தமிழகத்தில் மெல்ல குறையும் போக்கு தொடர்வது, உலக நாடுகளுக்கே, இந்தியாவும் தமிழகமும் கரோனா பேரிடரை வெல்லும் முறையில் முன்மாதிரியாக இருப்பதைத்தான் காட்டுகிறது என்கிறார்கள் சுகாதாரத் துறையினர்.

    இதற்குக் காரணம், தடுப்பூசி செலுத்துவதில் மாநில அரசு தீவிர கவனம் செலுத்தி வருவது என்பதும் குறிப்பிடத்தக்கது.
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp