திருச்சியில் மழை பாதித்த பகுதிகளில் அமைச்சர் கே.என். நேரு ஆய்வு

திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருச்சியில் மழை பாதித்த பகுதிகளில் அமைச்சர் கே.என். நேரு ஆய்வு
திருச்சியில் மழை பாதித்த பகுதிகளில் அமைச்சர் கே.என். நேரு ஆய்வு

திருச்சி: திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வயலூர் சாலையில் உள்ள வினோபா நகரில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், உய்யக்கொண்டான் வாய்க்காலின் கரைகளை பலப்படுத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள  அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதையும் படிக்கலாமே.. என்ன இவையெல்லாம் விட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகளா?

இதன் தொடர்ச்சியாக, ஆதி நகர், உறையூர் பகுதியில் உள்ள பாத்திமா நகர், தியாகராஜன் நகர், ஏ.யூ.டி.காலனி, குழுமணி சாலையில் லிங்கம் நகர், செல்வம் நகர் ஆகியபகுதிகளைப் பார்வையிட்டார். தொடர்ந்து, கருமண்டபம் பகுதியில் அசோக் நகர், வசந்தம் நகர், காந்தி நகர், டோபி காலனி, கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளை அமைச்சர் பார்வையிட்டார். 

மழை தண்ணீர் தேங்கியிருந்தால் உடனடியாக வெளியேற்றவும், தண்ணீர் அகற்றிய பிறகு தொற்று நோய் பரவாமல் தடுக்க கிருமிநாசினி மருந்துகளை தெளித்து பராமரிக்கவும் மாநகராட்சிப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது,  திருச்சி மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு, மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ.முஜிபுர் ரகுமான், சட்டப் பேரவை உறுப்பினர்கள் எம்.பழனியாண்டி, அ.சௌந்தரபாண்டியன், செ.ஸ்டாலின் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com