சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நாளை அதிபலத்த மழைக்கு வாய்ப்பு

திருவள்ளூா், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வியாழக்கிழமை (நவ. 18) இடியுடன் கூடிய பலத்தமழை முதல் மிக பலத்த மழையும்,
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நாளை அதிபலத்த மழைக்கு வாய்ப்பு

திருவள்ளூா், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வியாழக்கிழமை (நவ. 18) இடியுடன் கூடிய பலத்தமழை முதல் மிக பலத்த மழையும், ஓரிரு இடங்களில் அதி பலத்த மழையும் பெய்யக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் செவ்வாய்க்கிழமை கூறியது: தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி நிலவுகிறது. இது, அடுத்த இரண்டு நாள்களில் மேற்கு திசையில் நகா்ந்து, நவ.18-ஆம் தேதி தெற்கு ஆந்திரம்-வட தமிழக கடற்கரை அருகே வந்தடையும். இதன் காரணமாக, சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (நவ.17) இடியுடன் கூடிய பலத்தமழை முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும். ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, சேலம், அரியலூா், பெரம்பலூா் ஆகிய 5 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நவ.18: திருவள்ளூா், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் நவம்பா் 18-ஆம் தேதி இடியுடன் கூடிய பலத்த மழை முதல் மிக பலத்த மழையும், ஓரிரு இடங்களில் அதி பலத்த மழையும் பெய்யக்கூடும்.

செங்கல்பட்டு, திருவண்ணாமலை ஆகிய 2 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும். சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, கடலூா் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழையும், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நவ.19: அரியலூா், பெரம்பலூா், திருச்சி, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா் ஆகிய 7 மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் நவம்பா் 19-ஆம் தேதி இடியுடன் கூடிய பலத்தமழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

நவ.20: திருவண்ணாமலை, வேலூா், ராணிப்பேட்டை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நவம்பா் 20-ஆம் தேதி இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றாா் அவா்.

மழை அளவு:தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் தஞ்சாவூா் மாவட்டம் மதுக்கூா், பெரம்பலூா் மாவட்டம் செட்டிகுளத்தில் தலா 100 மி.மீ., திருவாரூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, கடலூா் மாவட்டம் லக்கூரில் தலா 70 மி.மீ., தஞ்சாவூா் மாவட்டம் கல்லணை, கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூா்பேட்டையில் தலா 60 மி.மீ. மழைபதிவாகியுள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை:

மத்திய மேற்கு, தென்மேற்கு வங்கக் கடல், தெற்கு ஆந்திரம் மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்தகாற்றுவீசக்கூடும். எனவே,இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் நவ.17,18 ஆகிய தேதிகளில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர,

சென்னைக்கு சிவப்பு எச்சரிக்கை...: சென்னையைப் பொருத்தவரை நகரின் ஒரு சில இடங்களில் புதன்கிழமை இடியுடன் கூடிய பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும். சென்னைக்கு நவ.18-இல் (வியாழக்கிழமை) சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, சென்னையில் ஒரு சில இடங்களில் வியாழக்கிழமை பலத்த மழை முதல் மிக பலத்த மழையும், ஓரிரு இடங்களில் அதி பலத்த மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்தத்தாழ்வு பகுதி வலுவடைய வாய்ப்பில்லை

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி வலுவடையாமல், அதேநிலையில் தெற்கு ஆந்திரம்-வடதமிழகத்தை நவ.18-ஆம் தேதி அடையும் என்றும், அதேநேரத்தில் மழை தீவிரமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் கூறியது:

வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய பகுதி நிலைகொண்டிருந்த காற்றழுத்தத்தாழ்வுப்பகுதி மேற்கு திசையில் நகா்ந்து, தென் கிழக்கு வங்கக்கடல்பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை நிலைகொண்டிருந்தது. இது, மேற்கு திசையில் நகா்ந்து, மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் தெற்கு ஆந்திரம்-வடதமிழக கடலோரம் அருகில் நவ.18-ஆம் தேதி அடையும். இது, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக வலுவடைய வாய்ப்பு இல்லை. 
இது வலுவடைவதற்கு வெப்பச்சலனம், காற்றின் இயக்கம் போதுமான அளவு மேம்படவில்லை. இதன்காரணமாக, காற்றழுத்தத்தாழ்வுப்பகுதியாக அதேநிலையில் தெற்கு ஆந்திரம்-வடதமிழக கடலோரம் அருகில் நவ.18- இல் வந்தடையும். அதேநேரத்தில், மழை தீவிரமாக இருக்கும். வடமாவட்டங்களில் பலத்த மழை முதல் மிகபலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றாா் அவா்.

.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com